Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பர்மா பஜாரில் பலே கில்லாடி.! எதையு திருட முடியாத விரக்தியில் சிசிடிவி கேமிரா அபேஸ்!!

தஞ்சை மாவட்டம் பர்மா பஜாரில் அசார் என்பவர் மொபைல் போன் கடை வைத்துள்ளார். வழக்கம்போல நேற்று இரவு 8 மணிக்கு கடையின் கதவை பூட்டிவிட்டு வீடு திரும்பிவிட்டார். இன்று காலை கடையை திறப்பதற்காக வந்தபோது வெளியே பாதுகாப்பிற்காக கண்காணிக்க வைத்திருந்த சிசிடிவி கேமிராவை காணவில்லை.

 

இதைக்கண்டு அதிர்ச்சியில் கடையை வேகமாக திறந்து பார்த்தால் எந்த பொருளும் திருடுபோகாமல் அப்படியே இருந்துள்ளது. இதையடுத்து திருட்டு சம்பவத்தை சிசிடிவி காட்சியில் ஆய்வு செய்தபோது வயதான ஒருவர் தொப்பி அணிந்தவாறு சிசிடிவி கேமிராவை கழட்டிச் சென்றது தெரியவந்தது.

 

எந்த பொருளும் கிடைக்காத விரக்தியில் கேமிராவை திருடிச் சென்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் புகார் கூறியுள்ள நிலையில் தஞ்சை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பு உடற்பயிற்சி செய்வதுபோல் கடைக்கு வெளியே இருந்த மின் விளக்கை திருடிய காமெடி சம்பவம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version