Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அய்யயோ வழக்க மாத்தாதீங்க! சுப்ரீம் கோர்ட்டில் கதறும் மாநில அரசு!

நீட் தேர்வை எவ்வாறு எதிர் கொள்வது என்று தெரியாமல் பல மாணவ, மாணவிகள், தற்கொலை செய்துகொள்கிறார்கள். அரியலூர் மாவட்டம் குழுமூரை சார்ந்த அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவ, மாணவிகள், இன்று நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.அதனை தவிர்த்து பல விவகாரங்களில், பல சமயங்களில், பல மாணவ-மாணவிகள் வெவ்வேறு காரணங்களுக்காக தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி அடுத்தடுத்து மாணவிகளின் உயிர் பறிபோவது வேதனையாகத்தான் இருக்கிறது.ஆகவே இதனை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பலரின் கருத்தாகவுள்ளது.

இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரை சேர்ந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். மதமாற்றம் செய்வதற்கு வற்புறுத்தியத்தின் காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து மாணவியின் தந்தை முருகானந்தம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார்கள்.

அதோடு மாணவியின் தந்தை முருகானந்தம் மற்றும் தனியார் பள்ளி சார்பாக தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று தெரிவித்து வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் தற்சமயம் மனு தாக்கல் செய்திருக்கிறார்.ஆனால் ஒரு மாணவியின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற கூடாது என்று மாநில அரசு எதற்க்காக அதற்கு தடை விதிக்க நினைக்கிறது? என்பதே தற்போது பலரின் கேள்வியாகவுள்ளது.

அதே நேரம் திமுக பல நேரங்களில் சிறுபான்மையினருக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்திருக்கிறது செயல்பட்டுமிருக்கிறது ஆகவே கிருஸ்துவ பள்ளி என்பதின் அடிப்படையில் அந்த பள்ளி நிர்வாகத்தை மாநில அரசு காப்பாற்ற நினைக்கிறதா? என்ற கேள்வியுமெழுகின்றது.

முன்பே மாநில காவல் துறையின் சார்பாக நடைபெற்ற விசாரணையில் அந்த பள்ளியில் மத மாற்றம் எதுவும் நடைபெறவில்லை என்று தங்களுடைய விசாரணை அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள் காவல் துறையை சார்ந்தவர்கள்.

காவல் துறையின் மீது நம்பிக்கையற்ற இறந்த மாணவியின் தந்தை சிபிஐ விசாரணை வேண்டும் என்று தெரிவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்று மதுரை உயர் நீதிமன்றம் சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றி உத்தரவிட்டது.

இந்த நிலையில், மாநில அரசு சார்பாக அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது என்ற விதத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

Exit mobile version