Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தர்ப்பைப் புல்! உடனடியாக வாங்கி பயன்படுத்துங்கள்!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தர்ப்பைப் புல்! உடனடியாக வாங்கி பயன்படுத்துங்கள்!

பாயில் தூங்குவது நம் உடலில் இயற்கையாகவே குளிர்ச்சியை தரும். மேலும் உடல் வலி, தூக்கம் இல்லாமல் தவிப்பது எல்லாம் குறைந்து நிம்மதியாக தூக்கம் வரும்.

காலம் காலமாக கோரைப் பாய் அல்லது பனைஓலை பாயைத்தான் பயன் படுத்துகின்றனர். உண்மையில், மிகச்சிறந்த மருத்துவ குணமும், நோய் எதிர்ப்புச்சக்தியும் கொண்டது தர்ப்பைப் புல் பாய்.

நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு, நாளடைவில் மறைந்து போனைவைகளில் ஒன்று அருமையான பொருள் பாய் இது தர்ப்பைப் புல் பாய் எவ்வளவு நன்மைகளை தருகிறது என்பதை தெரிந்துகொள்ளும்போது ஆச்சர்யத்தை தருகிறது.

தர்ப்பைப் புல் :தர்ப்பைப் புல் தொன்மையான ஒருவகை தாவரம். இது வளருமிடங்களில் மிதமான குளிர்ச்சியையும், மன அமைதியையும் உணர முடியும். தர்ப்பை, புண்ணிய பூமியை தவிர வேறெங்கும் வளராது என்பது ஐதீகம். தர்ப்பைப் புல் வளருமிடங்களில் எண்ணற்ற ஜீவராசிகள் அடைக்கலமாகியிருப்பதைப் பார்க்கலாம்.

முன்னோர்களுக்கு திதி கொடுக்கும்போதும், அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்கும்போதும், கையிலும் பிண்டத்தோடும் பயன்படுத்தப்படுவது, தர்ப்பைப் புல். அதற்கு அவ்வளவு மகிமை உள்ளது.இதற்கு எல்லாம் தர்ப்பைப் புல் பாய் பயன்படுத்தலாம்.

தியானம் செய்வதற்கு.யோகாசனம் செய்வதற்கு.ஹோமம் செய்வதற்கு போன்ற இறைவழிபாடு தொடர்பான அனைத்து சுபகாரியங்களிலும் தர்ப்பைப் புல்லால் செய்யப்படும் பாய் முக்கிய பொருளாக கருதப்படுகிறது.மேலும், தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் துர்சக்திகளின் நடமாட்டம் இருக்காது என்று நம்பப்படுகிறது.

நல்ல உறக்கத்தை தரும் தர்ப்பை பாய் :தர்ப்பைப் புல்லால் செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால்

உடல்சூடு தணியும்..மன உளைச்சல் நீங்கும்..நல்ல உறக்கம் கிடைக்கும்..ஆரோக்கியம் நீடிக்கும். இந்தப் பாயில் படுத்து உறங்கினால் சர்க்கரை நோய் கட்டுக்குள்ளிருக்கும்.

 

Exit mobile version