சென்னையில் மதுபானக் கடைகளுக்கு அனுமதி! உச்சநீதிமன்றம் உத்தரவு!

0
120

சென்னையில் மதுபானக் கடைகளுக்கு அனுமதி! உச்சநீதிமன்றம் உத்தரவு!

கொரோனா தொற்றால் சென்னையில் மதுபான கடைகள் மூடியிருந்த நிலையில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் மதுபான கடைகள் இயங்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைத்து பகுதியிலும் மதுபான கடைகள் இயங்கி கொண்டிருந்த நிலையில் சென்னையில் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் சென்னை பெருநகர பகுதிகளுக்கு உட்பட்ட திறக்காமல் இருந்த மதுபான கடைகள் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி பிறப்பித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 7 வரை இயங்கலாம் எனவும் கூறியுள்ளது.

இதுகுறித்த மேலும் அதிக நோய் தொற்று ஏற்பட்டு கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் உள்ள மதுபான கடைகளுக்கு அனுமதி இல்லை மற்றும் பெரிய மால்களில் உள்ள மதுபான கடைகளுக்கும் அனுமதி இல்லை எனவும் கூறியுள்ளது.

மேலும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கும் .

ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும்.

தனிநபர் இடைவெளியுடன் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதையும் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து தெளிவான அறிவிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.