தமிழ்நாட்டில் பல டாஸ்மாக் கடைகள் வாடகை ஒப்பந்தங்கள் முடிந்த பின்னரும் கடைகளை காலி செய்ய மறுப்பதாக குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. இப்படி காலி செய்யாமல் இருக்கும் கடைகளின் தகவல்களை சேகரித்து டாஸ்மார்க் நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடையை வாடகைக்கு விட்ட உரிமையாளர் மீது போலியான வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் டாஸ்மார்க் கடைகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த போலியான குற்றச்சாட்டு குறித்துசூளகிரி காமன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த பி.சுந்தர் மனுதாக்களில் தெரிவித்திருப்பதாவது :-
நான் கிருஷ்ணகிரியில் சொந்தமாக தொழில் செய்து வருகிறேன். எங்கள் ஊரில் எனக்கு சொந்தமான 220 சதுர அடி கொண்ட கடையில், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் டாஸ்மாக் செயல்படுகிறது. மாதம் ரூ.7,500 வாடகை வீதம் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், வாடகை ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதால் கடையே காலி செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். கேட்டும் கொடுக்கப்படாததால் பல முறை டாஸ்மார்க் மேலாளர் அவர்களுக்கு கடிதம் கொடுத்துள்ளார். இது மட்டுமின்றி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் இது குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தான் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம்தேதி சூளகிரி காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் நான் நடத்தி வந்த பேக்கரி கடைக்கு என்னை தேடி வந்தனர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அங்கு நான் இல்லாததால் என்னுடைய ஊழியர்களை அடித்து மேலும் நான் அங்கு தவறான முறையில் மது விற்பனை செய்வதாக என் மீது போலி குற்றச்சாட்டு போடப்பட்டது என்றும் வருத்தத்துடன் அவர் தெரிவித்திருக்கிறார்.
டாஸ்மாக் மேலாளர் தூண்டுதலின்பேரில், அவர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் சூளகிரி காவல்துறை என் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “கடையை காலி செய்ய சொன்னதற்காக இப்படி ஒரு பொய் வழக்கு கடை உரிமையாளர் மீது போடப்பட்டுள்ளது.” என்று மனுதரார் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த நிலையில் தான், ஒப்பந்தம் முடிந்தும் இடத்தினை காலி செய்யாமல் நடத்தப்பட்ட வரும் டாஸ்மார்க் கடைகளில் தகவல்களை சேகரித்துக் கொண்டு உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மார்க் நிர்வாக இயக்குனர் ஆஜராகும் படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.