Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்..  அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

#image_title

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்..  அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயுத தீர்வைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலுரை வழங்கி புதிய அறிவிப்புகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்

அதில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் செயல்பட்டு வரும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்தார் . தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6648 மேற்பார்வையாளர்கள் 14 ஆயிரத்து 794 விற்பனையாளர்கள் 2008 எழுவத்தி ஆறு உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 24 ஆயிரத்து 318 சில்லறை விற்பனை பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள் தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பு எத்தனை மேற்பார்வையாளர்களுக்கு 1100 ரூபாயும் விற்பனையாளர்களுக்கு 930 ரூபாயும் உதவி விற்பனையாளர்களுக்கு 840 ரூபாயும் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்

மேலும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் தொகுப்பு புதிய முறையில் பணியாற்றி வரும் மதுபான சில்லறை விற்பனை கடை பணியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் பணியின் இருக்கும் போது மரணம் அடைந்தால் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப நலநிதி மூன்று லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார் மேலும் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் அறிவித்தார்.

Exit mobile version