500 டாஸ்மாக் கடைகளுக்கு விரைவில்  மூடுவிழாவா??  அமைச்சர் வெளியிட்ட தகவல்! 

0
186
500 இடங்களில் டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படுகிறது

500 டாஸ்மாக் கடைகளுக்கு விரைவில்  மூடுவிழாவா??  அமைச்சர் வெளியிட்ட தகவல்! 

தமிழகத்தை டாஸ்மாக் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களும் கூறி கொண்டுதான் உள்ளனர். ஆனால் அது இன்னும் நடைமுறையில் சாத்தியப்படவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகவாது, டாஸ்மாக் கடைகளை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கூறி வருகின்றனர். அதில் முதல்படியாக பள்ளி, கல்லூரி மற்றும் கோவிலுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பள்ளி, கல்லூரிக்கு அருகில் டாஸ்மாக் இருப்பதால் மாணவ மாணவியர்களுக்கும், கோவில் அருகே இருப்பதால் கோவிலுக்கு வருபவர்களுக்கும் மது பிரியர்களால் தொந்திரவாக உள்ளது.

மேலும், சட்டசபை கூட்டத்தில் 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்படி பள்ளி, கல்லூரி மற்றும் கோவில்களின் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளும் 50 மீட்டர் இடைவெளியில் உள்ள கடைகளும் மூடப்படும். இது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டகளிலும் மேற்கொள்ளப்படும்.

இதன்படி போரூர் டோல்கேட்டில் பள்ளிகூடத்திற்கு அருகில் டாஸ்மாக் கடை (எண் 9170) இருப்பதாகவும், குன்றத்தூர் செல்லும் சாலையிலும் ஒரு கடை (எண் 9043) பள்ளி அருகே உள்ளது.

வடபழனி ஏ.வி.எம். ஸ்டுடியோ பகுதியில் பெருமாள் கோவில் எதிரில் ஒரு கடை (எண் 506), விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகரில் பள்ளி எதிரே உள்ள டாஸ்மாக் கடை (எண் 8870), மற்றும் செங்குன்றம் பகுதியில் உள்ள கடை, இவையனைத்தும் மூடப்பட வேண்டிய கடைகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்கும் என்பதையே இந்த நடவடிக்கைகள் குறிப்பிடுகிறது.