கோவை மாவட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர் சங்கத்தினர் போராட்டம்! காரணம் என்ன?

0
193
Tasmark employees union strike in Coimbatore district! What is the reason?

கோவை மாவட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர் சங்கத்தினர் போராட்டம்! காரணம் என்ன?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை தண்ணீர் தடம் கருமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயானந்த்(47). இவர் சிறுமுகை வெள்ளிக்குப்பம் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மேலும் நேற்று டாஸ்மார்க் கடையில் வசூல் ஆன ரூ15 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

மேலும் அப்போது அவரை பின்தொடர்ந்து இரண்டுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்து கொண்டிருந்தனர் அவர்கள் திடீரென விஜயானந்த்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வாக்குவாதம் முத்திய நிலையில் மர்ம நபர்கள் ஆத்திரம் அடைந்து விஜயானந்த்தை கத்தியால் குத்தினர் அதிர்ச்சியில் விஜயானந்த்தை கூச்சல் போடவே அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் திரண்டனர் .

மேலும் அவர்களை பார்த்ததும் ஹெல்மெட்  அணிந்து வந்த மர்மநபர்கள் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்த மேட்டுப்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பெயரில் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் விஜயானந்த்தை துரத்தியப்படி  ரெண்டு பேர் சொல்வதும் பின்னர் அவரைக் கத்தியால் தாக்குவதும் வீடியோவில் பதிவாகி இருந்தது.

மேலும் அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் கொள்ளையர்களை  தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து டாஸ்மார்க் பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்துவதாகவும் முடிவு செய்துள்ளனர். மேலும்  டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்தி கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.