திடீரென 3 நாட்கள் விடுமுறை விடப்பட்ட டாஸ்மார்க் கடைகள்!! டிசம்பர் 12 ஆம் தேதயிலிருந்து ஆரம்பம்!!

0
81
Tasmark shops suddenly closed for 3 days!! Starting from 12th December!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதை ஒட்டி மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு பட்டிமன்றி டாஸ்மார்க் கடைகளுக்கும் விடுமுறை தேதிகளை அறிவித்திருக்கிறார்.

திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறை நாட்கள் :-

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளுக்கு டிசம்பர் 8 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறையை அம்மாவட்ட ஆட்சியர் வழங்கி உத்தரவிட்டிருக்கிறார்.

குறிப்பாக, கார்த்திகை தீப திருநாளை ஒட்டி உள்ள நாட்களில் பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து அண்ணாமலையார் கோவிலை தரிசனம் செய்வதற்காகவும் கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்வதற்காகவும் பலதரப்பட்ட மக்கள் வரக்கூடிய நிலையில், குறிப்பிட்ட 3 நாட்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாவது :-

தீபத் திருவிழாவை முன்னிட்டு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது. அதன்படி டிசம்பர் 12 முதல் 3 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதனை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.