Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாக்கை இரண்டாக வெட்டிய டாட்டூ ஆர்ட்டிஸ்ட்!! பாடி மாடிஃபிகேஷன் ஆபரேஷன் பெயரில் நடத்த கொடூரம்!!

Tattoo artist who cut his tongue in two!! Atrocity to conduct in the name of body modification operation!!

Tattoo artist who cut his tongue in two!! Atrocity to conduct in the name of body modification operation!!

பாடி மாடிஃபிகேஷன் என்ற பெயரில் நாக்கை இரண்டாக வெட்டிய திருச்சியை சேர்ந்த டாட்டூ ஆர்ட்டிஸ்ட் கைது.

தற்போது தமிழகத்தில் டாட்டூ கலாசாரம் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மற்றும்  இளைஞர்களை தவறான வாழ்வியல் பாதைக்கு அழைத்து செல்கிறது என பல குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆர்வத்தினால் பலர் தங்களது  உடம்பில் டாட்டூ போட்டுக் கொள்கிறார்கள்.  இந்த மோகத்தின் அடுத்த கட்டமாக முகத்தில் தேவையற்ற வகையில் மாற்றங்களை செய்து வருகிறார்கள்.

அதாவது கண்களில் வண்ண நிறங்களை டாட்டூவாக போடுவது. நாக்கை இரண்டாக துண்டித்த முகத்தில் தேவை இல்லாமல் உருமாற்றம் செய்வது போன்றவைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில்  இயற்கைக்கு புறம்பாக பாடி மாடிஃபிகேஷன் என்ற பெயரில் திருச்சியை சேர்ந்த டாட்டூ ஆர்ட்டிஸ்ட் வாடிக்கையாளர்  நாக்கை இரண்டாக வெட்டி இருக்கிறார் என போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்ற பெயரில் டாட்டூ போடும் ஷபாப் ஒன்றி நடித்த வருந்து இருக்கிறார் அந்த நபர். அவர் தனது கண்களின் வெள்ளை கரு முழுவதும் கருப்பாக மாற்றி பச்சை குத்தி இருக்கிறார். மேலும் , தனது நாக்கை பாம்பு, ஓணான் போன்ற விலங்குகள் போல் மாற்ற இரண்டாக வெட்டி இருக்கிறார்.

மேலும், தனது உடம்பில் செய்த மாற்றங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு  விருப்பம் உடையவர்களுக்கு இது போன்ற மாற்றங்களை செய்து தருவதாக கூறி இருக்கிறார். அந்த வகையில் வாடிக்கையாளர் ஒருவரின் நாக்கை வெட்டிய காட்சியை இணையத்தில் பதிவேற்றம் செய்து இருக்கிறார். இதையடுத்து திருச்சி போலீசார் அவரை கைது செய்து இருக்கிறார்கள்.

Exit mobile version