ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றலும் வரவுகள் அதிகரிக்கும் நாள்!

0
118
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றலும் ஆதாயமும் அதிகரிக்கும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றலும் ஆதாயமும் அதிகரிக்கும் நாள். சந்திர பகவான் காலையில் ஜீவனஸ்தானத்திலும் மதியத்திற்கு பிறகு லாப ஸ்தானத்திற்கு வருவதால் காலையில் ஆற்றலும் மாலைக்குப் பிறகு ஒரு ஆதாயம் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது.

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் தெரியவரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். கொடுக்கல் வாங்கல் அருமையான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி அடைவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் வகையில் சில நன்மைகளை இன்றைய தினம் நீங்கள் எதிர் பார்க்கலாம்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் இருந்து வந்த காலதாமதங்கள் விலகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.