ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!
ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாளாக இருக்கும். தனவரவில் இருந்து வந்த தடைகள் குறையும். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும்.
பொருளாதார முன்னேற்றம் அருமையாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அபிவிருத்திகரமாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக காணப்படுகிறீர்கள்..
மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசியல்வாதிகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும்.
அரசியல்வாதிகள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும்.
உத்தியோகம் செல்ல பெண்களுக்கு எதிர்பாராத தன வரவு ஒன்று வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு இல்லத்தில் சந்தோஷமான நிகழ்வுகள் நடைபெறும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.