ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் நாள்!!

0
130
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் நாளாக அமையும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் கண்டிப்பாக வந்து சேரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இருந்து வந்த அலைச்சல்கள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் முன்னேற்றமான பாதையில் செல்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருப்பதால் புதிய முதலீடுகளை புகுத்தி முன்னேறிவீர்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்க சந்தோஷம் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவனின் அன்பு கிடைத்து மகிழ்வார்கள். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி மகிழ்ச்சி அடைவார்கள். இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குரு பகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.