இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதன்காரணமாக, தங்களுடைய நிறுவனங்களில் எந்த மாதிரியான பணி மாடல் கண்டுபிடிக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்வதில் ஊழியர்கள் ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.
டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச் சி எல் டெக், உள்ளிட்ட நிறுவனங்கள் ஹைபிரிட் மாடல் பணி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்து விட்டனர்.
பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்களை நேரடியாக அலுவலகம் வர வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேநேரம் பெரும்பாலான ஊழியர்கள் இன்னமும் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார்கள்.
வாரம் சிலநாட்கள் அலுவலகத்தில் பணி
சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வாரத்தில் சில நாட்கள் அலுவலகத்தில் வந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. ஆனாலும் இன்னமும் சில நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதித்திருக்கின்றன. இது தொடர்பாக தொழில்துறை நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கும்போது நோய்தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.
. ஆகவே தற்போதுள்ள சூழ்நிலையில், வொர்க் பிரம் ஹோம் என்ற மாடல் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
அலுவலகத்தில் பணி நடைபெறுமா?
மனித வளங்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்கும் முன்னணி நிறுவனமான டீம்லீஸ் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தொழில்நுட்ப முதல் உற்பத்தி வரையிலான பல நிறுவனங்கள் வரையில் ஒட்டு மொத்த விற்பனை முதல் ரீடையில் நிறுவனங்கள் வரை, சுகாதாரம் முதல் ஆட்டோமொபைல் துறை வரையில், என்று 58% நிறுவனங்களில் இந்த வருடம் முழுவதும் அலுவலகத்தில் பணி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
அலுவலகம் வர விரும்பும் ஊழியர்கள்
அலுவலகத்திற்கு நேரடியாக வந்து வேலை பார்க்க ஊழியர்கள் விரும்புகிறார்கள் என்று 43.5 சதவீத ஹெச் ஆர் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள். அதேநேரம் சுமார் 76.78 சதவீத பணியாளர்கள் தாங்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
டிசிஎஸ் மாடல்
வாரத்தில் சில நாட்கள் வீட்டில் இருந்தும், சில நாட்கள் அலுவலகத்திற்கு வந்தும் வேலைபார்க்கும் ஹைபிரிட் ஒர்க் மாடல் அமலுக்கு வரவிருப்பதாக டாடா கன்சல்டன்சி நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருக்கிறது.
வீட்டிலிருந்து வேலை செய்யும் போது குழந்தை பராமரிப்பு, விலங்கு பராமரிப்பு, வீட்டு வேலை, என பல வகைகளில் கவனச்சிதறல் உண்டாகிறது என்று டிசிஎஸ் நிறுவனம் கூறியிருக்கிறது.
இன்போஸிஸ் மாடல்
3விதமான வொர்க் மாடல்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. முதல்கட்டமாக அலுவலகம் அமைந்திருக்கும் அதே பகுதிகளில் வீடு உள்ளவர்கள் வாரத்தில் 2 நாட்கள் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2வதாக வெளியூர்களில் இருக்கும் ஊழியர்கள் அடுத்த சில மாதங்களில் அலுவலகம் வர வேண்டும் எனவும், 3வதாக நீண்டகால அடிப்படையில் ஹைபிரிட் வேலை திட்டத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எச் சி எல் மாடல்
ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதாக இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இயல்பு நிலை திரும்பும் வரையில் ஹைபிரிட் மாடல் பணி தொடரும் என்றும், அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.