Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர்! ஒடிசா மாநில அரசின் புதிய திட்டம்!

#image_title

தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர்! ஒடிசா மாநில அரசின் புதிய திட்டம்!

ஜனவரி மாதம் வரும் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்க ஒடிசா மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

வருடந்தோறும் ஜனவரி மாதத்தில் வரும் முதல் வாரம் அதாவது ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதி வரையிலான முதல் வாரம் சாலை பாதுகாப்பு வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த வாரத்தில் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகின்றது.

இதையடுத்து சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஒடிசா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தேநீர் வழங்கப்படும் என்று ஒடிசா மாநில போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பேருந்து, லாரிகள் போன்ற வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு இன்று(டிசம்பர்23) முதல் ஜனவரி 7ம் தேதி வரை இலவசமாக தேநீர் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

அதாவது நெடுஞ்சாலையில் பயணிக்கும் ஓட்டுநர்கள் சோர்வடையும் நேரமான காலை 3 மணி முதல் காலை 6 மணி வரையிலான நேரத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள தேநீர் கடைகள் மூலமாக இலவசமாக தேநீர் வழங்குவதற்கு ஒடிசா மாநில அரசு போக்குவரத்து துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலவச தேநீர் வழங்குவதற்காக அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் 5000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஒடிசா மாநில அரசின் இந்த புதிய முயற்சியை பொது மக்களும், வாகன ஓட்டிகளும் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version