டீ கடை “வெங்காய போண்டா” – ருசியாக செய்வது எப்படி?

0
85
#image_title

டீ கடை “வெங்காய போண்டா” – ருசியாக செய்வது எப்படி?

நமக்கு பிடித்த எண்ணெய் பண்டங்களில் ஒன்று வெங்காய போண்டா.மழை நேரத்தில் உண்ண தகுந்த ஒன்று பண்டம் இது.இந்த சுவையான காரமான வெங்காய போண்டாவை டீ கடை சுவையில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*பெரிய வெங்காயம் – 4(நறுக்கியது)

*கடலை மாவு – 1/2 கப்

*அரிசி மாவு – 1/4 கப்

*மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

*பச்சை மிளகாய் – 2(நறுக்கியது)

*கறிவேப்பிலை -1 கொத்து

*கொத்தமல்லி இலை – 1 தேக்கரண்டி

*பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் 4 பெரிய வெங்காயம் எடுத்து அதன் தோலை நீக்கி பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.அதில் நறுக்கிய 2 பச்சை மிளகாய்,நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலை உள்ளிட்டவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்,1/2 கப் கடலை மாவு மற்றும் 1/4 கப் அரிசி மாவு சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் போண்டா செய்வதற்கான எண்ணெயை ஊற்றவும்.அவை சூடேறியதும் தயார் செய்து வைத்துள்ள போண்டா மாவு கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட வேண்டும்.

பின்னர் போண்டா நன்கு வெந்து வந்ததும் அதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.இவ்வாறு போண்டா செய்தால் டீ கடைகளில் கிடைக்கும் அதே சுவையில் இருக்கும்.அது மட்டுமின்றி இந்த போண்டா எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுவென இருக்கும்.