Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோஷ்டி மோதலால் கடுப்பான திமுக தலைமை! எந்த மாவட்டத்தில் தெரியுமா!

திமுகவோடு ஒன்றாக கலந்த கோஷ்டி பூசல், மற்ற இடங்களை விட வும் நெல்லை மாவட்டத்தில் சற்று அதிகமாகத்தான் இருக்கும் கருப்பசாமிபாண்டியன் மாவட்டச் செயலாளராக இருந்த காலம் முதலே இங்கே பல குழுக்கள் இருக்கின்றன.

அதிலும் இரண்டு எம்.எல்.ஏ சீட்டுகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் நெல்லை மாவட்ட திமுக குறைக்கப்பட இருப்பதாக செய்திகள் கசிந்திருக்கின்றன நிலையில் களமாக மாறி இருக்கின்றது.

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மாவட்ட செயலாளராக இருக்கும் மாந்தை கிழக்கு மாவட்டத்தை இரண்டாக பிரித்து அதில் ஒரு தொகுதி உறுப்பினர்கள் வர்த்தக அணி தலைவர் கிரகாம்பெல்லிடம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

எனவே இராமநாதபுரம் மாவட்ட சட்டசபை தொகுதிக்காகவும் நெல்லை நாடாளுமன்ற தொகுதிகாகவும் ஸ்டாலினுடைய கிட்சேன் கேபினெட்டில் ஒரு பெரும் தொகையை கொடுத்திருப்பவர் இவர் என்ற பேச்சு இருக்கிறது.

இந்த முறையும் அதே பாணியில் கிரகாம்பெல் காய் நகர்த்திக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவருக்கு எதிராக நெல்லை நாடாளுமன்ற உறுப்பினரும் போட்டிக்கு நிற்பதாக சொல்கிறார்கள்.

நெல்லை மேற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாபனுக்கும் வர்த்தக அணி மாநில துணைத் தலைவர் அய்யா துரை பாண்டியன் அவர்களுக்கும் இடையில் ஆரம்பத்தில் இருந்தே மோதல்கள் இருந்து வருகின்றனர் நான்கு சட்டமன்ற தொகுதியை கொண்ட அந்த மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஒன்றை தனக்கு தரும்படி திமுக தலைமையிடம் அய்யா துரை பாண்டியன் வலியுறுத்தி இருக்கின்றார்.

அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் அவ்வபோது இவர்களிருவரும் இப்படி போஸ்டர் யுத்தம் நடத்திக் கொள்வது வழக்கமாகி போய்விட்டது.

இப்படி கலவரம் நடந்து வருவதை அறிந்து கொண்ட திமுக தலைமை மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகளை சென்னைக்கு வருமாறு அழைத்து இருக்கிறது மாவட்ட அளவில் மாற்றம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி கோஷ்டி பூசல் உச்சத்தை தொட தான் போகிறது என்கிறார்கள் விவரம் அறிந்த கட்சியினர்.

Exit mobile version