Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீருடன் இருந்த வாலிபர்கள்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!!

#image_title

90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீருடன் இருந்த வாலிபர்கள்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!!

கர்நாடக மாநிலத்தில் பணம்பூர் கடற்கரை பகுதியில் மங்களூர் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் ரோந்து சென்ற பொழுது கடற்கரையில் 90 லட்சம் மதிப்புள்ள திமுங்கல உமிழ்நீருடன் நின்று கொண்டிருந்த வாலிபர்களை அதிரடியாக கைது செய்தனர்.

கடல் வாழ் உயிரினங்கள் உயிருடன் இருந்தாலும் மருந்தாக பயன்படுககன்றது. இறந்தாலும் மருந்தாக பயன்படுககன்றது அந்த வகையில் கடல் வாழ் உயிரினமான திமிங்கலமும் மருந்தாகவும் மற்ற பல பயன்பாடுகளுக்கும் பயன்படுகின்றது.

அந்த வகையில் திமிங்கலத்தின் வாயில் இருந்து சுரக்கும் உமிழ் நீரானது பல கோடி ரூபாய் மதிப்பு மிக்கது. திமிங்கலத்தின் ஒரு கிலோ அளவு கொண்ட உமிழ்நீர் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக மதிப்பு மிக்கது. திமிங்கலத்தின் உமிழ் நீர் வாசனை திரவங்கள் பயன்படுத்தவும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த உமிழ் நீரை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

அந்த வகையில் கர்நாடக மாநிலம் பணம்பூர் கடற்கரையின் பகுதியில் மங்களூர் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது கரையில் மூன்று வாலிபர்கள் திமிங்கலத்தின் உமிழ் நீருடன் நின்று கொண்டிருந்தனர்.

அந்த மூன்று வாலிபர்களையும் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்பொழுது அந்த மூன்று வாலிபர்களும் திமிங்கலத்தின் உமிழ்நீர் என்று அழைக்கப்படும் அம்பர்கிரிசை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து விசாரணை நடத்திய காவல் துறையினர் அந்த வாலிபர்கள் யார் என்ன என்பதை சற்றி தெரிந்து கொண்டனர். அந்த வகையில் அந்த மூன்று வாலிபர்களும் உடுப்பி மாவட்டம் சாலிகிராமத்தில் வசிக்கும் ஜெயகரா, சிவமொக்கா மாவட்டம் சாகர் பகுதியில் வசிக்கும் ஆதித்யா, ஹாவேரி மாவட்டம் சிகான் பகுதியில் வசிக்கும் லோகித் குமார் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஜெயகரா, லோகித் குமார், ஆதித்யா ஆகிய மூன்று பேரையும் மங்களூர் மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 90 லட்சம் மதிப்புடைய 900 கிராம் எடை கொண்ட திமிங்கல உமிழ் நீரையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

Exit mobile version