தெலுங்கானாவில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த காங்கிரஸ் வேட்பாளரிடம், ‘தான் பாஜகவின் தாமரை சின்னத்துக்கு தான் வாக்களிக்க போகிறேன்’ என்ற பெண் தொழிலாளியை, காங்கிரஸ் வேட்பாளர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் மக்களவைப் பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது. மூன்றாம் கட்ட தேர்தலில் 94 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜகவுக்கு வாக்களிப்பதாக கூறிய பெண் தொழிலாளியை, காங்கிரஸ் வேட்பாளர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் நிர்வாகி டி ஜீவன் ரெட்டி நிஜாமாபாத் மக்களைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறர். இவர் அந்த தொகுதி உட்பட்ட ஆர்மூர் பகுதிகள் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த போது, வயலில் பணி செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளியிடம் தனக்கு கை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஆனால் அந்த பெண்ணோ தான் தாமரை சின்னத்தில் தான் வாக்களிப்பேன் என்று அவரின் முகத்தில் அடித்தார் போல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவன் ரெட்டி, அந்த பெண்ணின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டுள்ளார்.
<iframe width=”1280″ height=”720″ src=”https://www.youtube.com/embed/Gl0zLkAAXQ0″ title=”Did Telangana Congress Candidate Slap Old Farmer Woman For Supporting BJP? |2024 Lok Sabha Elections” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சம்பவத்தின் பின்னணி : அண்மையில் நடந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் அந்த பெண் தொழிலாளி காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததாகவும், அவருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படவில்லை என்றும் ஜீவன் ரெட்டியிடம் புகார் அளித்துள்ளார். இதற்கு அவர் சரியான பதில் தெரிவிக்காததால், தான் இந்த முறை பாஜகவுக்கு வாக்களிப்பேன் என்று அந்த பெண் கூறியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஜீவன் ரெட்டி கன்னத்தில் அறைந்ததாகவும் சம்பவ இடத்திலிருந்து சிலர் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வு வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளி நிச்சயமாக காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் பலத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.