Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோபமாக பாரதிக்கு போன் செய்த நபர்! வெண்பாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஒரு சீரியல் தான் பாரதி கண்ணம்மா.

பெண்களின் தன்னம்பிக்கைக்கு மற்றுமொரு ஊன்றுகோலாக இந்த சீரியல் திகழ்ந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு சாதாரண பெண் வாழ்வில் எத்தகைய துன்பங்களை சந்திக்கிறார்.

அவர் அந்த துன்பங்களிலிருந்து மீண்டு தன்னை எவ்வாறு நிலைநிறுத்திக் கொண்டு தன்னுடைய வாழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார் என்பது தொடர்பாக தான் இந்த கதை சென்று கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஹேமாவிடம் உன் அம்மாவிற்கு விவாகரத்து தர மாட்டேன் என்று பாரதி சத்தியம் செய்து கொடுக்கிறார், இதற்கு நன்றி தெரிவித்து கண்ணம்மாவிடம் வேறு ஒரு காரணத்தையும் பாரதி தெரிவிக்கிறார்.

பாரதி கண்ணம்மா விவகாரம் முடிவடையாத ஒன்று ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் முடிவுக்கு வரும் இந்த சீரியலை இன்னமும் முடிவுக்கு கொண்டுவராமல் ஓட்டிக் கொண்டிருக்கிறார் அந்த சீரியலின் இயக்குனர்.

அப்படிப் பார்த்தாலும் கூட பெண்களின் தன்னம்பிக்கைக்கு தேவையான பல விஷயங்கள் என்ற தொடரின் மூலம் ஒளிபரப்பப்படுகிறது.

ஆனால் இந்த தொடரின் ஆரம்பத்தில் கதை மிகவும் சுவாரசியமாக இருந்ததன் காரணமாக, ரசிகர்கள் கண்களுக்கு அந்த சீரியலில் இருந்த குறைகள் எதுவும் தெரியவில்லை.

இருந்தாலும் தற்போது கதை கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருப்பதால் இந்த சீரியலை முடித்து வைக்குமாறு ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் அதன் முடிவு இயக்குனரின் கையில் தான் இருக்கிறது. அந்தவகையில் பாரதி, கண்ணம்மா விவாகரத்து செய்யும் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது.

ஹேமா பாரதியிடம் அடம் பிடிக்க குழந்தைக்காக விவாகரத்து வேண்டாமென்று முடிவெடுக்கிறார் பாரதி, பாரதி விவாகரத்துக் கொடுக்க போவது கண்ணம்மாவுக்கு தான் என்பது ஹேமாவுக்கு தெரியாது.

தன்னுடைய அம்மா இன்னும் உயிருடன் இருக்கிறார், அவருக்கு தான் அப்பா பாரதி விவாகரத்து கொடுக்கவிருக்கிறார் என்று குழந்தை ஹேமா நினைத்துக் கொண்டிருக்கிறார்.

அவரைத் தவிர்த்து மற்ற எல்லோருக்கும் உண்மை என்னவென்று தெரியும் என்பதால் பாரதி விவாகரத்து கொடுக்கவில்லை என்று தெரிவித்தவுடன் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக லட்சுமிக்கு அளவில்லாத ஆனந்தம், இதனைத்தொடர்ந்து பாரதியிடம் பேசும் கண்ணம்மா விவாகரத்து கொடுக்காமல் போனதற்கு நன்றி என தெரிவிக்கிறார், உடனடியாக இடைமறித்து பாரதி அதற்கு ஒரு புதிய காரணத்தையும் தெரிவிக்கிறார்.

அதாவது ஒருவேளை ஹேமாவின் பேச்சை கேட்காமல் நான் உனக்கு விவாகரத்து கொடுத்து விட்டால் அவளுடைய தாய் தொடர்பாக தேட தொடங்கி விடுவாள் நான் விவாகரத்து கொடுத்தது உனக்கு தான் என தெரிய வந்தால் இறுதியில் உன்னை அவளின் தாயென நினைத்து விடுவாள்.

அது உண்மை கிடையாது அதேபோல ஹேமாவுக்கு தான் வளர்ப்பு குழந்தை என தெரிந்துவிடும் என்று பாரதி மற்றொரு காரணத்தை தெரிவிக்க கண்ணம்மாவுக்கு சிரிப்புதான் வந்தது.

ஹேமா, லட்சுமி, உள்ளிட்ட குழந்தைகளுமே பாரதி மற்றும் கண்ணம்மாவின் குழந்தைகள் தான் என்பது பாரதிக்கு இன்னும் தெரியாது. அது தெரிந்திருந்தால் இந்த தொடர் எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும் பாரதி எடுத்த முடிவை அவருடைய வழக்கறிஞரான வெண்பாவுக்கு கண்ணம்மா தொலைபேசியின் மூலமாக தெரிவிக்கிறார்.

இதைக் கேட்ட வெண்பா கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகிறார், கோபத்தில் பாரதியை தொடர்பு கொண்டு பேசுகிறார், ஆனால் ஹேமா போனை எடுக்க வழக்கம்போல வெண்பா கடுமையான கோபத்திற்கு ஆளாகிறார். இறுதியில் வெண்பாவின் திருமணத்திற்கு ஹேமா வாழ்த்துச் சொல்லி இணைப்பை துண்டிக்கிறார்

Exit mobile version