பிக் பாஸ் சீசன் 6! இந்த வாரத்தோடு இவர்களெல்லாம் காலி?

0
134

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த 9ம் தேதி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து அசல் கோலாறு, சிவின்கணேசன், முகமது அசின், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா ஷெரினா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆரியன் தினேஷ், கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி, சாணக்கியன், விஜே கதிரவன், குயின் சி ஸ்டாலின்லி, நிவா, தனலட்சுமி என்று 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார்கள்.

முதல் நாள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்ற போட்டியாளர்கள் 4 பிரிவுகளாக பிரிந்து வீட்டில் இருக்கின்ற வேலைகளை செய்யுமாறு பிக் பாஸ் அறிவுறுத்தினார். அதில் கிச்சன் குழு தலைவராக சிவின் கணேசனும்,வெஷல் கிளீனிங் குழு தலைவராக வி.ஜே. கதிரவனும், கிளீனிங் குழு தலைவராக ஜனனியும், டாய்லெட் கிளீனிங் குழு தலைவராக அமுத வாணனும் செயல்பட்டு வந்தனர்.

பிக் பாஸில் பொதுவாக 40 நாட்களைக் கடந்து வரும் சண்டைகள் அனைத்தும் இந்த சீசனில் முதல் 2 தினங்களிலேயே ஆரம்பமாகிவிட்டது. இதற்கு சனிக்கிழமை நடந்த எபிசோடில் கமல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அதோடு 20 போட்டியாளர்கள் ஏற்கனவே இருக்கின்ற நிலையில் நேற்று மைனா நந்தினி வைல்கார்ட் என்டியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது நாளான இன்றைய தினம் முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது அதில் இந்த பிக் பாஸ் சீசனின் முதல் நாமினேஷன் பிராசஸ் என்று பிக் பாஸ் தெரிவிக்க போட்டியாளர்கள் அனைவரும் ஒருவர் பின் வருவதாக confursion ரூமிற்கு சென்று மற்ற போட்டியாளர்களை நாமினேட் செய்கிறார்கள்.

முதலாவதாக ஆயிஷா வந்து விக்ரமன் மற்றும் சிவினைம் நாமினேட் செய்கிறார். அடுத்ததாக அந்த ரூமிற்கு வரும் ராபர்ட் ஆயிஷாவையும், ஆரியன் தினேஷ் கனகரத்தினம் சாந்தியையும், ஜி பி முத்து குயின்ஸி யையும், குயின்சி ரக்ஷிதாவையும் நாமினேட் செய்யும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.