பாரதி கண்ணம்மா ரோஷினியின் வாழ்வில் இவ்வளவு சோகமா?

0
186

ஒரு காலத்தில் சின்னத்திரையில் டிஆர்பி ரேட்டிங்கில் கலக்கிக் கொண்டிருந்த சீரியல் பாரதிகண்ணம்மா. இந்த தொடரின் கண்ணம்மாவாக நடித்திருந்தார் ரோஷினி இவருக்கு மிகப்பெரியளவில் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. தற்போது அதே ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.

கண்ணம்மாவாக இல்லத்தரசிகளின் இதயத்தில் இடம் பிடித்தவர் ரோஷினி. இந்த நிலையில், அவர் திடீரென்று சீரியலிலிருந்து விலகிச்சென்றார். அதற்கு பல காரணங்கள் தெரிவிக்கப்பட்டதால் இன்று வரையில் அவருடைய விலகலுக்கு உண்மையான காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது. ஆனால் இந்த தொடரிலிருந்து விலகியதற்கு தன்னுடைய ரசிகர்களிடம் ரோஷினி மன்னிப்பு கூறியிருந்தார் என்று சொல்லப்படுகிறது.

இவருடைய விலகலுக்கு பிறகு அந்த தொடரின் டிஆர்பி ரேட்டிங் மிகவும் டவுன் ஆகிப்போனது. தற்போது அவருக்கு பதிலாக வினுஷா அந்த கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், இந்த வருடம் ஆரம்பத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது பாகம் ஆரம்பிக்க அதில் என்ட்ரி கொடுத்தார் ரோஷினி. அவருடைய ரசிகர்களுக்கு ஆச்சரியம்தான் வெள்ளித்திரையில் அவரை காண ஆவலாக இருந்த அவருடைய ரசிகர்கள் மறுபடியும் சின்னத்திரையில் அதுவும் ஒரு பிரபலமான நிகழ்ச்சியில் பார்த்ததும் குஷியாகி போனார்கள்.

இந்த சூழ்நிலையில், பல கட்டங்களைக் கடந்து இறுதி 6 போட்டியாளராக இருந்த கண்ணம்மா ரோஷினி சென்றவாரம் எலிமினேஷன் செய்யப்பட்டார். அவருடைய எலிமினேஷன் சுற்றில் அவர் பேசியது ரசிகர்களை கண்கலங்க வைத்தது.

அதாவது எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் ரோஷினி வாழ்வில் பல பிரச்சனைகள் இருந்திருக்கின்றன. அவை அனைத்தையும் தாண்டி மிகப்பெரிய மன உளைச்சலிலிருந்து மீண்டு வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

அதோடு பல நேரங்களில் நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு சென்ற பிறகு இதை நினைத்து அழுது கொண்டிருப்பார் என்று சொல்லப்படுகிறது. கோமாளிகள், மற்ற போட்டியாளர்களர்களுடன் சகஜமாக பேசுவதற்கு அவருக்கு நிறைய தினங்கள் தேவைப்படுகிறதாம். ஒரு மிகப்பெரிய முடிவை எடுத்துவிட்டு மிகவும் டவுனாக இருந்தவரை அந்த நிகழ்ச்சி மீண்டும் மேலே கொண்டு வந்தது எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அவருடைய இந்த பதிவின் மூலமாக அவர் மன உளைச்சலிலிருந்தது மீண்டு வந்திருப்பது உள்ளிட்டவைகள் அவருடைய ரசிகர்களுக்கு தெரியவந்திருக்கிறது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் சென்றவாரம் நடந்திருந்தாலும் இன்றுவரையில் இணையதளத்தில் ரசிகர்களால் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வீடியோவையும் ரசிகர்கள் தேடிப்பார்த்து வருகிறார்கள்.