மாநகராட்சி தேர்தலில் இதையெல்லாம் மக்களிடம் சொல்லி வாக்குளை பெறுங்கள்! கட்சி நிர்வாகிகளுக்கு ஐடியா கொடுக்கும் இபிஎஸ்!
தமிழகத்தின் 10 ஆண்டுகள் ஆட்சியை அதிமுக நடத்தி வந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அம்மாவின் மறைவிற்குப் பிறகு முதல்வராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் பதவி ஏற்றார். துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார். இன்றுவரை கட்சியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அதனையடுத்து தற்பொழுது சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் பத்து ஆண்டுகள் கழித்து திமுக பெரும் வெற்றியடைந்தது. தற்பொழுது மக்கள் மத்தியில் திமுக நல்லாட்சி செய்து வருகிறது என்று கூறுகின்றனர். அதனை அடுத்து தற்பொழுது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலும் பெரும்பாலான திமுகவினரே வெற்றி அடைந்தனர். அதனையடுத்து தற்பொழுது மாநகராட்சித் தேர்தல் வர உள்ளது.
இதிலாவது வெற்றி காண வேண்டும் என்று அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி அவர்கள் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்களுடன் இன்று ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டமானது ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி தேர்தல் பணிகள் குறித்து பேசினார். இந்த தேர்தலில் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறினார். தற்பொழுது திமுக அரசு மக்கள் மத்தியில் நல்லாட்சி செய்வதாக மேற்குக்கு சில திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அவர்கள் கூறிய முக்கிய திட்டங்கள் ஏதும் தற்போது வரை அமலுக்கு வரவில்லை. அந்த வகையில் கூறும்பொழுது மாதம் ஆயிரம் ரூபாய் குடும்ப அட்டை வைத்திருக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அது இன்றளவும் அமலுக்கு வரவில்லை.
அதனை அனைத்தும் நம் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று கூறினார். இதுபோல திமுக பல பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கூறியுள்ளது. அதனை மக்கள் முன்னிலையில் நாம் தெரிவிக்க வேண்டும். அதேபோல நாம் ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு செய்த முதியோர் உதவி தொகை , திருமண உதவித் திட்டம் பல்வேறு திட்டங்களை நாம் அமலுக்கு கொண்டு வந்தோம். அதனை பற்றி எல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறி வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்று நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும் இந்த கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை, சட்டமன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம் ,மணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி வெங்கடாச்சலம் சக்திவேல் , எம் கே செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.