விஜய்யுடன் இணையும் தெலுங்கு முன்னணி ஹீரோ! இந்த படத்தில் தானா?

0
134
Telugu leading hero to team up with Vijay! Is it in this movie?

விஜய்யுடன் இணையும் தெலுங்கு முன்னணி ஹீரோ! இந்த படத்தில் தானா?

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி67 படம் உருவாக உள்ளது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலில் தளபதி67 படத்திற்கு பிறகு இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் பல ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது.அதனால் இந்த படமும் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் பேசிவருகின்றனர்.துப்பாக்கி 2 படத்தில் தெலுங்கு ஹீரோ மகேஷ் பாபு நடிக்கவுள்ளார் எனவும் தகவல் கசிந்துள்ளது.மகேஷ் பாபு இந்த படத்தில் வில்லனாக களமிறங்கவுள்ளார்.தமிழில் மகேஷ் பாபு வில்லனாகவும் விஜய் ஹீரோவாக நடிக்கவுள்ள இந்த படம் தெலுங்கில் விஜய் வில்லனாகவும் மகேஷ் பாபு ஹீரோவாகவும் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த படம் தொடங்க சில வருடங்கள் இருகின்றது என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.