சாலையில் நடமாடினால் சுட்டுத் தள்ளவும் தயங்கமாட்டோம்! கடுமையாக எச்சரித்த தெலுங்கானா முதல்வர்! நடந்தது என்ன.?

Photo of author

By Jayachandiran

சாலையில் நடமாடினால் சுட்டுத் தள்ளவும் தயங்கமாட்டோம்! பீதியை கிளப்பிய தெலுங்கான முதல்வர்! நடந்தது என்ன.?

ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சாலையில் சுற்றித் திரிபவர்களை சுட்டுத் தள்ளவும் அரசு தயங்காது என்று மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தெலுங்கானா முதல்வர் பேசியது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுக்க இன்னும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்திய அளவில் மாநிலங்கள் முடக்கம், மாநில அளவில் மாவட்ட எல்லைகள் முடக்கம் செய்யப்பட்டு வீட்டில் இருக்குமாறு மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்த அச்சத்தை உணராமல் பண்டிகைக்கு விடுமுறை அளித்ததை போல பலர் சாலையில் நடமாடுவதும், இருசக்கர வாகனங்களில் வழக்கம் போலவே சுற்றித் திரிகின்றனர். இதனை தடுக்கும் விதமாக தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கானாவில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சாலையில் சுற்றித் திரிபவர்களை சுட்டுத் தள்ளவும் அரசு தயங்காது என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இவரது பேச்சு தெலுங்கானா மக்களின் வயிற்றில் புளியை கரைக்கும் விதமாக அமைந்துள்ளது. அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை விழிப்புணர்வு செயல்களில் ஈடுபட்டாலும் சிலர் அதை பின்பற்றாமல் போவதனாலே இதுபோன்ற கடுமையான எச்சரிக்கைகள் வெளி வருவதாக எடுத்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் இன்று காலை மதுரையில் கொரோனா பாதித்த நபர் இறந்தது பலருக்கு கொரோனா மீதான பயத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால், அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியில் யாரும் வரவேண்டாம் என்றும், வாகனங்களில் சுற்றினாலும் காவல்துறை உங்கள் மீது வழக்கு தொடுக்கும் என்றும் தமிழக அரசின் சார்ப்பாக கூறப்பட்டுள்ளது.

Exit mobile version