முதல்வருக்கு கோவில் கட்டிய ஆசிரியர்! காரணம் தெரிந்தால் அசந்துடுவிங்க!

0
127

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு ஓவிய ஆசிரியர் சிறிய அளவிலான கோவிலை கட்டியிருக்கிறார். பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி அதற்காக தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, அவர் இதனை செய்திருக்கிறார் கல்லக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர் பேட்டையை சார்ந்தவர் ஓவிய ஆசிரியர் செல்வம் திருக்கோவிலூரை அடுத்த சிவனார் தாங்கள் கிராமத்திலே அரசு நடுநிலை பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.

சென்ற பத்து வருடங்களாக சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் ஏழாயிரத்து எழுநூறு ரூபாய் ஒரு மாத ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். இன்றுவரை அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கிறார்கள். தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து அவர்கள் வெகு நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனாலும் அவர்களுடைய கோரிக்கையானது இதுவரையில் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, ஓவிய ஆசிரியர் செல்வம் துணி சோப்பு மற்றும் குளியல் சோப்புகள் உபயோகப்படுத்தி மற்றும் சிறு கத்தியால் சோப்புகளை செதுக்கி தமிழக முதல்வரின் உருவம் பொறித்த ஒரு சிறிய அளவிலான கோவிலை வடிவமைத்திருக்கிறார்.

இரண்டே நாட்களில் அவர் இந்த ஆலயத்தை செய்து முடித்திருக்கிறார். இப்பொழுது இதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கின்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அந்த ஓவிய ஆசிரியர் செல்வம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கடவுளாக நினைத்து இந்த கோவிலில் வடிவமைத்து இருக்கின்றேன். பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார். நடிகைகளுக்கு கோவில் கட்டப்படும் நம் ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு கோவில் எழுப்பி இருப்பது அனைத்து தரப்பு மக்களுடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது.