கோவில் நகைகளை  பிக்செட் டெபொசிட்செயாலாம் !! ஸ்டாலின்திட்டம்!!

0
115
Temple jewelery can be deposited in Pixet !! Stalin's plan !!

கோவில் நகைகளை  பிக்செட் டெபொசிட்செயாலாம் !! ஸ்டாலின்திட்டம்!!

இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் நிறைவு பெற்ற பின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நிருபர்களை சந்தித்த போது கூறியதாவது:- திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் நிற்க பார்க்கிங் வசதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோவிலுக்கு உள்ள எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது . திருச்செந்தூர் கோவிலுக்கு குடமுழுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தபட வேண்டும். ஆனால் கடந்த மாதத்துடன் குடமுழுக்கு தேதி நிறைவடைந்தது. இந்த கொரோனா தொற்றின் காரணமாக கடந்த மாதம் குடமுழுக்கு விழாவை நடத்த முடியாமல் போனது. எனவே அது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது. கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதில் இந்து சமய அறநிலையத்துறை மந்தமாக செயல்படுவதாக சென்னை நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று விரைவாக செயல்படுவோம் என்றும், ஆட்சிக்கு வந்து 65 நாட்களில் சிறந்த முதல் பத்து அமைச்சர்களில் முதலிடத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுவே திமுக வின் நல்ல ஆட்சியின் சாட்சியாக உள்ளது என்றும் கூறினார் .

தி.மு.க வின் ஆட்சியில் ரூ.560 கோடிக்கும் அதிக மதிப்பிலான கோவில் நிலங்கள் உள்ளிட்ட 110 ஏக்கர் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் இப்போது மீட்கப்பட்டுள்ளது. கோவில்களுக்கு நன்கொடையாக வரும் தங்க நகைகளை மும்பையில் உள்ள தங்க உருக்கு ஆலையில் கொடுத்து உருக்கி, அதனை பிக்சர்டு டெபாசிட் முறையில் அந்த அந்த கோவில்களின் பெயரில் வங்கியில் இருப்பு வைத்தால் ஆண்டு தேறும் வருமானம் கிடைக்கும் என முதஎல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறினார்.இதனை செயல்படுத்த தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவில்களில் ஆடி மாதத்தின் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.மனித உயிர்கள் முக்கியமா? இல்லை திருவிழாக்கள் முக்கியமா? என்பதை உணர வேண்டும். திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்குவது பற்றி ஆலோசித்து பின் அறிவிக்கப்படும். என்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.