ராகு – கேது தோஷம் நீங்க போக வேண்டிய கோயில்கள்!

0
214
#image_title

ராகு – கேது தோஷம் நீங்க போக வேண்டிய கோயில்கள்!

ராகு – கேது பகவான்களுக்கு பாம்பு போல் உடலமைப்பு இருக்கும். ராகு பகவானுக்கு வாலில் விஷம் இருக்கும். கேது பகவானுக்கு தலையில் விஷம் இருக்கும். அதனால்தான் கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. ராகு-கேதுவால் ஒருவருக்கு சர்ப்ப தோஷம் ஏற்பட்டுவிட்டால், அவர்களுக்கு திருமணத்தடை, வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும்.

இந்த சர்ப்ப தோஷம் நீங்கள் எந்த கோவிலுக்கு சென்று என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று பார்ப்போம் –

உங்களுக்கு சர்ப்பதோஷத்தால் திருமண தடை ஏற்பட்டால், புதுக்கோட்டையில் உள்ள பேரையூர் கோவிலில் இருக்கும் மூலவர், நாகநாதர். அம்மன், பிரகதாம்பாள் ஆகிய கடவுளை வழிபாடு செய்யலாம். நல்ல பலன் கிடைக்கும்.

ஈரோடு மாவட்டம்,  கொடுமுடிவில் உள்ள ஊஞ்சலூரில் கோவிலில் நாகேஸ்வரர் மூலவரை வணங்கினால் தோஷத்திலிருந்து விடுபடலாம்.

காஞ்சிபுரம் மாவட்டம், காமாட்சியம்மன் கோயில் அருகே நாகம் காளத்திநாதர் கோவில் உள்ளது. மூலவர் மகாகாளேஸ்வரரை வணங்கினால் நன்மை பயக்கும்.

கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரன் கோயிலில் நாகேஸ்வரரை வணங்கி வந்தால் தோஷத்திலிருந்து விடுபடலாம்.

சென்னைக்கும், திருப்பதிக்கும் இடையில் காளஹஸ்தி கோவில் உள்ளது. இந்த கோவில் புகழ்பெற்ற ராகு-கேது கோவிலாகும். இன்று சென்று வழிப்பட்டால் திருமணத் தடை நீங்கும்.

கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வர கோவிலில் உள்ள நாகேஸ்வரரையும், பிறையணிவாணுதலாள் அம்மனையும், நாகராஜரையும் வழிபட்டால் சர்ப்பதோஷத்திலிருந்து விடுபடலாம்.

சென்னை போரூர், கெருகம்பாக்கத்தில் உள்ள நீலகண்டேஸ்வரர், ஆதிகாமாட்சியை வணங்கினால் தோஷத்திலிருந்து விடுபடலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தில் நிச்சயம் தோஷத்தலிருந்து விடுபடலாம்.

திருவள்ளூர் மாவட்டம், சோளிங்கரில் உள்ள நாகவல்லி சமேத நாகநாதேஸ்வரரை தரிசனம் செய்தால் நன்மை கிடைக்கும்.

திருவாரூர்-நாகை பாதையிலுள்ள கீழ்வேளூரிலிருந்து 3 கி.மீ, தொலைவில் உள்ளது திருக்கண்ணங்குடி. சுயம்பு லிங்கமாக காளத்தீஸ்வரர் இங்கு வீற்றிருக்கிறார்.

நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகணேஸ்வரரை வணங்கினால் சர்ப்பதோஷத்திலிருந்து விடுபடலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவிலில் மூலவரை வழிபாடு செய்தால் நிச்சயம் இத்தோஷத்திலிருந்து விடுபடலாம்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அபயவல்லி கோவிலில் வழிபாடு நடத்தினால் அருளாசி பெறலாம்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள நயினார்கோவிலில் இறைவனுக்கு வழிபாடு நடத்தினால் நிச்சயம் பலன் பெறலாம்.