Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமித்துக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனோ காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்காக பல ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர்.

இல்லம் தேடி கல்வியின் ஒருங்கிணைப்பாளர்கள் பணி முடிந்து திரும்பும் வரை தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தற்காலிக ஆசிரியர் தேவையுள்ள பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களின் மூலம்  இந்த கல்வியாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நான்கு மாதங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை பணியில் அமர்த்திக் கொள்ளலாம்.

இந்த பணியானது வருகின்ற 9-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதில் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் தகுதியுடையவர்களாக இருப்பின் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

2.  பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு        ரூ .7500 பட்டத்தாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000 மதிப்பூதியமாக வழங்கப்படும்.

3. இல்லம் தேடி கல்விப் பணிகளில் ஈடுபட்டு இருக்கும் ஆசிரியர்கள் தங்கள் பணியை முடித்து எப்போது பள்ளிக்கு திரும்பினாலும் பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக பணி விடுப்பு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version