Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிம்பு திரைப்படத்திற்கு வைக்கப்பட்ட அஜித்தின் செல்லப்பெயர்!

சிலம்பரசன் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்திற்கு தான் இப்படி ஒரு டைட்டிலை வைத்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஜில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்குனர் என்ற காரணத்தால், எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கின்றது .என்பது உண்மையான விஷயம் தான் ஆனால் கன்னடத்தில் வெளியான மப்டி படத்தை ரீமேக் செய்ய போகின்றார்கள் என்பதை நினைக்கும் போது தான் சற்று பயமாக இருக்கின்றது.

சிவராஜ்குமார் நடித்து மூன்று வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றியடைந்த படம் தான் இது ஒரு நல்ல ரவுடி கதாபாத்திரத்திற்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும் நடக்கின்ற மோதல்தான் தான் திரைப்படத்தின் கதை. இந்த திரைப்படத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் அசத்தி இருப்பார் என்று சொல்கிறார்கள். அந்த கதாபாத்திரத்தில் தான் சிலம்பரசன் நடித்திருக்கின்றார். கன்னடத்தில் சிவராஜ்குமார் தவிர வேறு யார் நடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு ஒத்து வந்திருக்காது என்று சொல்கிறார்கள்.

சிலம்பரசன் அவர்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும், சற்று மாற்றங்கள் செய்து இருப்பதாக தெரிவிக்கிறார்கள். அதைத்தவிர சிலம்பரசன் நடிகர் அஜித் குமாரின் தீவிர ரசிகர் என்ற காரணத்தால், பத்து தல என டைட்டில் வைத்திருக்கின்றார்கள். கொஞ்சம் தடுமாறினாலும் திரைப்படம் வெளியாகும் போது அஜித் ரசிகர்களுக்கு அது பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்பதை நினைத்தால் தான் சற்று பதறுகின்றது. அவ்வாறு எல்லாம் நடக்காது என்று நம்புகிறோம்.

Exit mobile version