இன்று ஒரே நாளில் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவை! பிரதமர் மோடி துவங்கி வைப்பு!

0
195
#image_title

இன்று ஒரே நாளில் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவை! பிரதமர் மோடி துவங்கி வைப்பு!

இன்று(மார்ச்12) ஒரே நாளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவைகளை காணொளி வாயிலாக துவங்கி வைத்தார்.

ஏற்கனவே இந்தியாவில் பல முக்கிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டு வருகின்றது. சென்னை, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, ஹைதராபாத், குஜராத் மற்றும் மேலும் பல முக்கிய நகரங்களில் மக்கள் வந்தே பாரத் இரயிலை பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து இன்று(மார்ச்12) ஒரே நாளில் 10 புதிய வந்தே பாரத் இரயில்களையும் மேலும் பல இரயில் திட்டங்களையும் தொடங்கி வைத்துள்ளார்.

ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று(மார்ச்12) சென்னை முதல் மைசூர் இடையிலும், திருவனந்தபுரம் முதல் மங்களூரு இடையிலும் என்று மொத்தம் 10 புதிய வந்தே பாரத் இரயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன் மூலம் இன்று(மார்ச்12) மட்டும் சென்னை-மைசூரு, திருவனந்தபுரம்-மங்களூரு, ஆமதாபாத்-மும்பை, செகந்திராபாத்-விசாகப்பட்டினம், ராஞ்சி-வாரணாசி, பாட்னா-லக்னோ, ஜல்பைகுரி-பாட்னா, லக்னோ-டேராடூன் உட்பட பத்து புதிய வந்தே பாரத் இரயில்கள் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை முதல் மைசூரு வரை தொடங்கப்பட்ட வந்தே பாரத் இரயில் இன்று(மார்ச்12) முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை வாரத்தின் புதன் கிழமை தவிர அனைத்து நாட்களிலும் சென்னை முதல் பெங்களூரு வரை இயங்கும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பும் வந்தே பாரத் இரயில் அதே நாள் இரவு 9.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இதையடுத்து மறுமார்க்கமாக பெங்களூருவில் இருந்து காலையில் 7.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் இரயில் அதே நாள் நண்பகல் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து சென்னை முதல் மைசூரு வரை வந்தே பாரத் இரயில் இயக்கப்படும். இந்த வந்தே பாரத் இரயில் காலையில் 6 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு அதே நாள் நண்பகல் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் இரயில் அதே நாள் இரவு 11.20 மணிக்கு மைசூருக்கு சென்று சேரும்.

இன்று(மார்ச்12) துவங்கி வைக்கப்பட்டுள்ள புதிய வந்தே பாரத் இரயிலில் எட்டு பெட்டிகள் இணைக்கப்படும். மேலும் டிக்கெட் முன்பதிவு குறித்த விவரங்கள் அனைத்தும் விரைவில் அறிவிக்கப்படும். இன்று(மார்ச்12) பத்து புதிய வந்தே பாரத் இரயில்கள் சேவை துவங்கி வைத்த இந்த நிகழ்வில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என் ரவி ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.