இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரையில் இந்த கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

0
147

நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு தளர்வுகள் உடன் அமலில் இருந்து வருகிறது இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் இருக்கின்ற கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் இன்றைய தினம் முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், தென்காசி சங்கரன்கோவில் உள்ளிட்டவற்றில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதேபோல இன்று மட்டும் தென்காசி அரசூர் நங்கை அம்மன் கோவில், மேல முத்தாரம்மன் கோவில், உள்ளிட்டவற்றிலும் எட்டாம் தேதி மற்றும் தென்காசி பொருந்தி நின்ற பெருமாள் கோவில், கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ணநாதர் சுவாமி கோவில், அதோடு சிவசைலம் சிவசைலநாதர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இருந்தாலும் ஆலயங்களில் வழக்கமாக நடக்கும் பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் ஆகவே இந்த தினங்களில் மேலே குறிப்பிட்ட கோவில்களுக்கு பக்தர்கள் வருவதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை கொடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.