Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எல்லையில் சீனாவால் தொடரும் பதட்டம் – பாதுகாப்புதுறை அமைச்சர் திட்டவட்டம்!

எல்லையில் சீனாவால் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வருகிறது. ஏனெனில் சீனா தனது படைகளை திரும்ப பெறாமல் இருப்பதால் அங்கு தற்போது பதட்டம் நிலவி வருகிறது.

சீனா இவ்வாறு செய்வதால் இந்தியாவும் தனது படைகளை திரும்பப் பெறவில்லை. கல்வான் பள்ளத்தாக்கு பிரச்சினைகளை தொடர்ந்து இரு நாட்டு படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டன. பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஆனால் இரு நாடுகளும் தங்களின் படைகளை திரும்பப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆங்கில ஊடகத்திற்கு கூறியதாவது:

“இந்தியா அதிவேகமாக உள்கட்டமைப்புகளை உருவாகி வருவதாகவும், சீனா சில முக்கிய நிபந்தனைகளை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் சீனா தனது படைகளை திரும்பப் பெற்றால் மட்டுமே இந்தியாவும் தனது படைகளை திரும்பப் பெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயார் நிலையில் இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.”

Exit mobile version