Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராஜஸ்தானில் பயங்கரம் : கர்ப்பிணி பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை!

ராஜஸ்தானில் பயங்கரம் : கர்ப்பிணி பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை!

ராஜஸ்தானில் கர்ப்பிணி பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மணிப்பூரில் இரு கிராம மக்களுக்கு ஏற்பட்ட மோதலில் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி நடுரோட்டில் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்தியா முழுவதும் போராட்டங்களும், கண்டனங்களும் எழுந்தன.

இந்த வடு மறைவதற்குள் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று கர்ப்பிணி பெண்ணை அனைவர் மத்தியிலும் நிர்வாணமாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கண்டனங்கள் தெரிவித்து, குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இன்று அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து, அவர்களை வெளுத்து வாங்கி சிறையில் அடைத்துள்ளனர்.

Exit mobile version