சேலத்தில் நடந்த பயங்கர சம்பவம்! சினிமா பாணியில் கொலை! 10 பேரை கைது செய்த போலீசார்!
சேலத்தில் 2 ரவுடி கும்பலுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. சேலம் கிச்சிப்பாளையம் காளி கவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் வினோத்குமார். ரவுடியான இவர் தன் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் ஆன மணிகண்டன், பிரதாப், உதயகுமார் ஆகியோருடன் ஆறாம் தேதி இரவு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக அந்த 4 பேரையும் வெட்டி சாய்த்தது. அதில் நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதன் பின்பு அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து போய் விட்டது. இதில் நான்கு பேருக்குமே தலை, கை, கால், முகம் என அனைத்து இடங்களிலும் வெட்டு ஏற்பட்டது. இதனை அறிந்த கிச்சிப்பாளையம் காவல் நிலைய காவலர்கள் விரைந்து சென்று சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வினோத்குமார் மட்டும் இல்லாமல் உயிரிழந்தார். மற்ற மூவருக்கும் சிகிச்சை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இதனை தொடர்ந்து போலீசார் என்ன காரணமாக இவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று விசாரித்து வருகின்றனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்களுக்குள் கோஷ்டி மோதல் நடந்தது தெரியவந்துள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவரை ஒரு கும்பல் வெட்டி சாய்த்தது. அவருடைய மாமியாருக்கும் எதிரி கும்பலான ஜானின் கும்பலில் இருந்து மிரட்டல் வந்து இருந்தது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் கடந்த வாரம் ஜான் கும்பலில் இருந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். எனவே இந்த கும்பல்களிடன் இருந்த பகை இன்னமும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக ஜானின் கூட்டாளிகள் செல்லத்துரையின் கூட்டத்தில் நான்கு பேரை சரமாரியாக தாக்கியதும், அதில் வினோத்குமார் உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது. எனவே சேலத்தில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
அதன்பேரில் சங்ககிரி பகுதியின் டி.எஸ்.பி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சங்ககிரி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற ஆறு பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் தான் அந்த கிச்சிப்பாளையம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர்கள் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக கிச்சி பாளையத்தில் அதிமுக பிரமுகரின் மகன் உட்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அந்த கொலை வழக்கில் இந்த 10 பேரும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த 10 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கோஷ்டி மோதலின் காரணமாக இன்னும் பல கொலைகள் விழலாம் என்றும் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். மேலும் கிச்சிபாளையத்தில் உள்ள மக்கள் பயத்தோடு உள்ளதோடு, போலீசாரிடம் இவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.