இந்திய கடற்படை துப்பாக்கிச் சூட்டின் காரணமாக காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நாகை மீனவர் வீரவேரிடம் நலம் விசாரித்த திருமாவளவன் அதன்பிறகு பத்திரிக்கையாளரை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, காயமடைந்த மீனவருக்கு தமிழக அரசு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது.
அவரு ஒரு வருடத்திற்கு கடலுக்கு செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் அவருக்கு கூடுதல் நிவாரணமும் அல்லது வேறு தொழில் செய்வதற்கான உதவியோ அரசு சார்பில் வழங்கப்பட வேண்டும் துப்பாக்கிச் சூடு நடத்திய கடற்படை வீரர் கைது செய்யப்பட வேண்டும் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் இலங்கை கடற்படையை மத்திய அரசு தட்டி கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி வெளிப்படையாக இயங்கக்கூடியது தேர்தலில் மக்களுக்கு பதில் சொல்லும் அளவுக்கு ஓட்டு வங்கி இருக்கும் ஒரு கட்சி ஆகவே பாஜக ஊர்வலம் யாத்திரையை நாங்கள் எதிர்ப்பதில்லை.
ஆர் எஸ் எஸ் அதிகாரப்பூர்வமான இயக்கம் இல்லை. மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் கேட்டபோது பட்டியல் தர இயலவில்லை. தலைமறைவு பயங்கரவாத இயக்கம் போல இருட்டில் செயல்படுகிறது. 18 குண்டு வெடிப்பு வழக்குகளில் அந்த அமைப்பிற்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இது அவருடைய கருத்தாகும் ஆனால் அவர் உண்மையிலேயே அந்த அமைப்பை எதிர்ப்பதற்கான காரணம் இந்துத்துவா கொள்கை தமிழகத்தில் வேரூன்றி விட்டால் நாம் அரசியல் செய்ய முடியாது என்ற பயம் காரணமாகவே அவர் அந்த அமைப்பை எதிர்க்கிறார் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரையில் இந்துக்களை மதமாற்றம் செய்வதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஈடுபடும் இயக்கங்களுக்கு திருமாவளவனை போன்றோர் மறைமுகமான ஆதரவை வழங்கி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பல சமயங்களில் நேரடியாகவே அது போன்ற இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் தான் அதிகம்.
அப்படி இந்துக்களை மதமாற்றம் செய்து கொண்டு மத அரசியலை மறைமுகமாக ஊக்குவிக்கும் சில இயக்கங்களுக்கு ஆதரவு வழங்கி அதன் மூலமாக அரசியலில் தன்னுடைய அதிகாரத்தையும், நிலைத்தன்மையையும் நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் காலூன்றி விட்டால் இவர்கள் செய்யும் அனைத்து செயல்களும் முறியடிக்கப்படும். ஆகவே தான் திருமாவளவனை போன்றோர் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு எதிராக பலவிதமான கருத்துக்களை தெரிவித்து எதிர்ப்பு கூறி வருகிறார்கள்.