Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்! 5 ராணுவ வீரர்கள் பலி

#image_title

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்! 5 ராணுவ வீரர்கள் பலி

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. இங்கு பிம்பர்காலி பூஞ்ச் இடையே ஐந்து வீரர்களை ராணுவ வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றபோது, திடிரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 5 ராணுவ வீரர்களும் வீர மரணம் அடைந்தனர்.

பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து இந்திய ராணுவம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டதுள்ளது, இந்திய ராணுவத்துக்கு சொந்தமான வாகனம் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் பிம்பர் காலி பகுதியிலிருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சன்ஜியாத் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

நேற்று மாலை 3 மணியளவில் பனிமூட்டம் அதிகமாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் ராணுவ வாகனத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் ராணுவ வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில், ராஷ்டிரிய ரைபிள் படைப்பிரிவைச் சேர்ந்த 5 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தை ராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version