ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு! இதுவரை உயிரிழப்புகள் தொட்ட உச்சம்!

0
141
Terrorist bombing in Afghanistan! The deadliest peak so far!

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு! இதுவரை உயிரிழப்புகள் தொட்ட உச்சம்!

கடந்த சில மாதங்களாகவே ஆப்கானிஸ்தானில் மக்களின் நிலைமை மிகவும் மோசமாகி கொண்டே இருக்கின்றது. அமெரிக்கப் படைகள் திடீரென அங்கிருந்து வெளியேற தொடங்கியதன் காரணமாக அதன் அதிபர் தலைமறைவானார். அதன் காரணமாக அங்குள்ள மக்கள் பெரும்  துயரத்திற்கு ஆளானார்கள். தலிபான்கள் அங்கு ஆட்சி, அதிகாரங்களை கைப்பற்றி மக்களுக்கு மிகுந்த துயரமான சட்டங்களை அங்கு அமல்படுத்தி வருகின்றனர்.

பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆப்கன் மக்கள் பல்வேறு சிரமங்களை தாண்டியும் வாழ்ந்து வருகின்றனர். வேறு வழி இல்லையே. அதில் சிலர் விமானங்களின் மூலம் தப்பிச் சென்று விட்டாலும், அங்கிருக்கும் மக்கள் அதை எல்லாம் அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிறுபான்மையினர் தொழுகை செய்யும் மசூதி ஒன்று உள்ளது. இது குண்டூஸ் நகரில் அமைந்துள்ளது.

மக்கள் வழக்கமாக தொழுகை செய்யும் நேரத்தில் குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது. அதுவும் மிகவும் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு அரங்கேறியுள்ளது. அதில் 100க்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர். அங்கு சில காலங்களாகவே இந்த மாதிரி சதிவேலைகளை ஐஎஸ் அமைப்பை சேர்ந்த சிலர் அங்கு நிறைவேற்றி வருகின்றனர்.

எனவே அதுபோல் இதுவும் அவர்களது வேலையாகத்தான் இருக்கும் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த அமைப்பும் இந்த சதிவேலைக்கு பொறுப்பேற்கவில்லை. அங்கு பல்வேறு தாக்குதல்கள் மக்களின் மீது நடந்தேரிக்கொண்டு உள்ளது. அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு அங்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் தலிபான்கள் அங்கு தவறு செய்பவர்களை மிகக் கொடூரமாக தண்டனை அளிப்பதாகவும் நாம் செய்திகளில் பார்த்து வருகிறோம். ஒரு செய்தி தொடர்பாளர் அங்கிருந்த தொலைக்காட்சிகளில் மசூதி இடிக்கப்பட்டு இருப்பதையும், அந்த குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதையும், பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களை ஆம்புலன்ஸில் கொண்டு செல்வதையும் பார்த்ததாகக் கூறியுள்ளார். எனவே உயிரிழப்புகள் மிகவும் அதிகமாக அதாவது எண்ணிக்கையில் அடங்காமல் நூற்றுக்கும் மேல் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.