பாஜகவின் முக்கிய பதவிகளை நிர்வகிக்கும் பயங்கரவாதிகள்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!
சமீப காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல் ஆங்காங்கே பெருமளவில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் டைலர் ஒருவர் கூறிய கருத்துக்கு தீவிரவாதிகள் இருவர் அவரை சரமாரியாக வெட்டியது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அவர்கள் அந்த டைலரை கொலை செய்யும் பொழுது, அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இவ்வாறு ஐஎஸ்ஓ அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தான் செய்வார்கள். இவர்களும் அவர்களைப் போலவே செய்கின்றனர் என்று பலர் சந்தேகித்தனர். அதுமட்டுமின்றி இந்த கொலையில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் பாஜக கட்சியில் சேருவதற்கு முயற்சி செய்ததாக கூறி பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
அதனையடுத்து தற்பொழுது ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்று போலீசார் கூறியிருந்தனர். அவ்வாறு பயங்கரவாதிகளை பிடித்து தருபவருக்கு இரண்டு லட்சம் வரை பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். ரியாஸி என்ற மாவட்டத்தில் உள்ள துக்சன் என்ற கிராமம் உள்ளது.அந்த கிராமத்தில் சந்தேகிக்கும் படி இருவர் சுற்றித்திரிந்ததால் அவர்களை கண்காணித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிறகு அவர்கள் இருவரும் புல்வாமை சேர்ந்த பைசல் அகமது தார் மற்றும் ராஜோரியை சேர்ந்த தாலிப் என தெரியவந்தது. இந்த இரு தீவிரவாதிகளிடமிருந்து விலை மதிக்க தக்க துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.
மேலும் இவர்களை விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மை தெரிய வந்தது. ராஜோரி மாவட்டத்தை சேர்ந்த தாலிப் என்பவர் சமீபத்தில் அம் மாவட்டத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு இவர் முக்கிய பங்கு ஆற்றிய தாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பிற்கு காரணமான தாலிப் என்பவர் தற்பொழுது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா உடன் பங்கேற்றுள்ளார். மேலும் அவ்வாறு பங்கேற்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.
இதனால் பாஜக தான் தீவிரவாதிகளை நாட்டிற்குள் ஊடுருவி செல்வதற்கு முக்கிய பங்காற்றுகிறது என்று பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அது மட்டுமின்றி பாஜக கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் பஷீர் என்பவர் ஜம்மு காஷ்மீரின் சிறுபான்மை பிரிவின் புதிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைத்தள நிர்வாகியாக இந்த தாலிப் என்பவரை நியமித்து உள்ளார். அந்த நியமிப்பு கடிதம் குறித்து பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இது குறித்து கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் என்பவரிடம் கேட்டபொழுது,தாலிப் இரு மாதங்களுக்கு முன்பாகவே அவரது ராஜினாமா கடிதத்தை தன்னிடம் கொடுத்துவிட்டார்.
தற்போது அவருக்கும் இந்த கட்சிக்கும் எந்த ஒரு சம்மதமும் இல்லை என கூறினார். மேலும் காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறியதாவது, தற்பொழுது நாடு முழுவதும் பாஜக விரிவாக்கம் அடைந்து கொண்டே செல்கிறது. இதனை சிறிதும் பிடிக்காத பயங்கரவாத அமைப்புகள் சில ஆண்டுகளாகவே தன்னை மிரட்டி வருகின்றனர். அவர்கள் பாஜகவில் இணைந்து மக்களுக்கு தீங்கு விளைவிப்பதாக தெரிவித்து வருகின்றனர். அதற்கான முதல் படி இதுவாகக் கூட இருக்கும் எனக் கூறினார்.