டிடிஎஃப் வாசனுக்கு சோதனை மேல் சோதனை தான்!!..

0
288
#image_title

டிடிஎஃப் வாசனுக்கு சோதனை மேல் சோதனை தான்!!..

டிடிஎஃப் வாசன் அவர்களுக்கு முதல் எதிரி அவரது வாய் பேச்சு தான், இரண்டாவது எதிரி அவரது பைக் தான்.

டிடிஎஃப் வாசன் அவர்கள் ஒரு பைக் சாகச வீரர். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பின் தொடரும் பிரபலமான நபர், பிரபல யூடிப்பர் என்று பலவாறு இவரை கூறலாம். ஆனால் இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. போக்குவரத்துக்கு ,இடையூறாக வாகனங்களை ஓட்டுவது, விபத்தை ஏற்படுத்தியது, பொது இடங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்களை கூட்டம் கூட்டியது. பொதுமக்களுக்கு இடையூறு செய்தது என சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டிடிஎஃப் வாசன் தனது நண்பருடன் மகாராஷ்டிரா மாநிலம் சென்று பிறகு, அங்கிருந்து தமிழகம் திரும்பி உள்ளார். சரியாக சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் அருகே பைக்கில் சென்றபோது வீலிங் செய்து சாகசம் செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் சென்ற இருசக்கர வாகனம் கவிழ்ந்து, டிடிஎஃப் வாசன் தலைப்புற விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். விபத்து குறித்து அறிந்த அங்குள்ளவர்கள் டிடிஎஃப் வாசன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டிடிஎஃப் வாசன் அவர்களுக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டு, கால்களிலும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில மாதங்கள் அவர் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டிடிஎஃப் வாசன் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டிடிஎஃப் வாசன் அவர்கள் “மஞ்சள் வீரன்” என்னும் படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற செய்தி சென்ற மாதம் தான் வெளியானது. இதைக் கேட்டவுடன் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் அவர் விபத்தில் சிக்கி, சில மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்ற செய்தி அவர் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனியாவது, டிடிஎஃப் வாசன் தனது வாலுத் தனத்தை இருசக்கர வாகனத்திலும், சாலையிலும் காட்ட வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.