TESTICULAR PAIN: ஆண்களே உங்கள் விதைப்பையில் வலி வீக்கம் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்!!
பெண்களை போல் ஆண்களுக்கும் அவர்களது அந்தரங்க பகுதியில் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது.ஆணுறுப்பு வீக்கம்,விதைப்பை வீக்கம்,வலி போன்ற பல்வேறு பாதிப்புகளை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது.
நீண்ட நேர உடலுறுவு,வாயுத் தொல்லை,மென்மையான விதைப்பை போன்ற காரணங்களால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.சிலருக்கு ஹார்மோன் மாற்றங்களால் விதைப்பை வீக்கம் ஏற்படுகிறது.
இன்றைய உலகில் 40 வயதை கடந்த ஆண்கள் பலர் இந்த விதைப்பை வீக்க பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.அதேபோல் உடல் பருமன்,இரத்த ஓட்ட பிரச்சனை,இதய நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு இவை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
விதைப்பை வீக்கத்திற்கான அறிகுறிகள்:
*அடிக்கடி சிறுநீர் கழித்தல்
*சிறுநீர் கழிக்கும் பொழுது வலி
*சிறுநீரின் நிறம் மாற்றம்
*சிறுநீர் வாசனை வேறுபாடு
விதைப்பை வீக்கம் குறைய வீட்டு வைத்தியம்:
1)கழற்சிக்காய் விதை
இந்த விதையை அரைத்து விதைப்பையில் வீக்கம் உள்ள இடத்தில் பூசினால் சில தினங்களில் வீக்கம் வற்றும்.
2)கழற்சிக்காய் + விளக்கெண்ணெய்
கழற்சிக்காய் பொடியை 2 தேக்கரண்டி விளக்கெண்ணெயில் சேர்த்து காய்ச்சி விதைப்பையில் வீக்கம் ஏற்பட்ட இடத்தில் அப்ளை செய்து வந்தால் வலி,வீக்கம் குணமாகும்.
3)கழற்சிக்காய் பொடி + பால்
ஒரு கிளாஸ் அளவு பாலில் 1/2 தேக்கரண்டி கழற்சிக்காய் பொடி கொதிக்க வைத்து குடித்து வந்தால் விதைப்பை வீக்கம் முழுமையாக குணமாகும்.