Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னையில் தொடரும் வருமான வரி துறையின் சோதனைகள்!

income tax raid

income tax raid

சென்னையில் தொடரும் வருமான வரி துறையின் சோதனைகள்!

சென்னை மட்டுமல்லாது பல்வேறு இடங்களில் தற்போது வரி துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த வாரம் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பெனி நிறுவனத்தின் மீது இரண்டு நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று புரவங்கரா எனும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் இந்த நிறுவனத்தின் மீது வருமானவரித்துறையின் திடீரென சோதனையில் ஈடுபட்டனர் .இந்த சோதனையானது வரி கணக்கு தாக்கல் தொடர்பாக நடத்தப்பட்டதாக பலர் தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

புரவங்கரா நிறுவனத்திற்கான கிளைகள் சென்னையில் மட்டுமல்லாது பெங்களூர், ஹைதராபாத், பூனை,போன்ற பல இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு கொண்டு வருகின்றது.இந்த புரவங்கரா நிறுவனத்திற்கு கீழ் இயங்கும்,மற்றும் இதன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.

Exit mobile version