Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கட்சியில நடக்குறது எதுவும் விஜய்க்கே தெரியல!.. போட்டு தாக்கும் தாடி பாலாஜி

thadi balaji

TVK Vijay: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். தற்போது ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின் அவர் தனது அரசியல் பணிகளை துவங்கிவிருக்கிறார். தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செல்லும் திட்டமும் அவரிடம் இருக்கிறது. ஏனெனில், 2026 சட்டமன்ற தேர்தலில் தனது பலத்தை நிரூபிப்பது என்கிற முடிவில் இருக்கிறது.

விஜய் வலது கையாக செயல்பட்டு வருபவர் புஸ்ஸி ஆனந்த். இவர் புதுச்சேரியை சேர்ந்தவர். புஸ்ஸி என்கிற தொகுதியில் வெற்றி பெற்றதால் அவருக்கு பெயர். அதன்பின் விஜயின் ரசிகர் மன்ற தலைவராக இருந்தார். இப்போது விஜய்க்கு ஆல் இன் ஆலாக மாறிவிட்டார். விஜயை யார் சந்திக்க வேண்டும்? யாருக்கு அனுமதி என்பதை கூட அவர்தான் முடிவு செய்கிறார்.

ஏற்கவே விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் புஸ்ஸி ஆனந்த் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். புஸ்ஸி ஆனந்த் நன்றாக நடித்து விஜயை நம்ப வைத்து ஏமாற்றி வருகிறார். என்னை விடவும் புஸ்ஸி ஆனந்தை விஜய் நம்புகிறார் என பகீர் புகார் சொன்னார். இப்போது நடிகர் தாடி பாலாஜியும் ஆனந்த் மீது புகார் கொடுத்திருக்கிறார்.

தலைவர் விஜய் புஸ்ஸி ஆனந்தை நம்புகிறார். கட்சிக்காக பலரும் தங்களின் சொந்த பணத்தை செலவு செய்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். ஆனால், புஸ்ஸி ஆனந்த் எதையுமே விஜயிடம் சொல்வது இல்லை. நான் பலமுறை தலைவரை பார்க்க முயற்சி செய்தும் புஸ்ஸி ஆனந்த் அதை தடுத்து வருகிறார். தான் மட்டுமே விஜய்க்கு முக்கியமானவராக இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். தவெக முதலாமாண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் என இரண்டுக்கும் என்னை அழைத்தார்கள். ஆனால், அங்கே போனால் அனுமதி இல்லை என்கிறார்கள். இந்த கோபம் எனக்கு மட்டும் இல்லை. கட்சியில் பலருக்கும் இருக்கிறது. புஸ்ஸி ஆனந்த் இப்படி செயல்படுவது தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சியை தடுக்கும்’ என பொங்கியிருக்கிறார் தாடி பாலாஜி.

Exit mobile version