Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தல அஜித் குமார் “குட் பேட் அக்லி” வரும் ஏப்ரல் மாதம் ரலீஸ் தேதி அறிவிப்பு!!

Thala Ajith Kumar "Good Bad Ugly" release date announcement in April!!

Thala Ajith Kumar "Good Bad Ugly" release date announcement in April!!

சென்னை: தல அஜித் குமார் அவர்களின் 63-வது திரைப்படம் தற்போது நடித்து வருகிறார். அந்த படத்தின் பெயர்  “குட் பேட் அக்லி” என சூட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் தல அஜித் குமாருடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த வருடம் முதல், மற்றும் இரண்டாம் லுக் புகைப்படம் வெளியிடப்பட்டு அதிகமாக சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். மேலும் இந்த “குட் பேட் அக்லி”  திரைப்படம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு முதலில் தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க இருந்த நிலையில் சில காரணங்களால் அதிலிருந்து விலகினர். ஆனால் தற்போது “குட் பேட் அக்லி”  படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்க்கான டப்பிங் சென்ற வாரம் தல அஜித் குமார் முடித்துள்ளார்.

இந்த படத்தின் புதிய போஸ்டர்கள் தற்போது இயக்குனர் வெளியிட்டுள்ளார். இந்த “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த நிலையில் இதற்க்கு முன்னால் இருக்கும் “விடா முயற்சி” திரைப்படம் வெளியாகும் என தகவல் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் “விடா முயற்சி” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை.

தற்போது “குட் பேட் அக்லி” படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக ரிலிஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி இந்த வருடம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.

Exit mobile version