Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தல அஜித் – சுதா கொங்கரா கூட்டணியில் தல  61! இதுதான் கதையாம்!

தல அஜித் தனது வலிமை படப்பிடிப்பை முடித்த பிறகு சுதா கொங்கரா உடன் கூட்டணி அமைத்து  தல 61 படத்தில் நடிக்கவிருக்கிறாராம். தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.வலிமை படத்தின் படப்பிடிப்புகள்   கொரோனாவின் காரணமாக தடைபட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கின்றனவாம்.

வலிமை படத்தினை முடித்த பிறகு தல 61 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கதை முதலில் தளபதி விஜய்க்கு கூறப்பட்டதாகவும் இடையில் முருகதாஸ் தலையிட்டதால்  சுதாவின் கதை நிராகரிக்கப்பட்ட தாகவும் அப்போதே தகவல்கள் வெளியானது. தற்போது அதே கதையில் சிறு சிறு மாற்றங்களை செய்தே பல அஜீத்திடம் கதை சொல்லி ஓகே வாங்கி விட்டாராம் சுதா கொங்கரா.

அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் சாதுவான கேரக்டரில் நடித்திருந்தார். அதற்கு அப்படியே மாறாக வட சென்னையில் முழுக்க முழுக்க அதிரடி கலந்த கதாபாத்திரத்தில் வலிமை படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை வருகிறாராம்.தல 61 படத்தையும் அவ்வாறே எதிர்பார்க்கலாம் என்று கூறுகின்றார் வட்டாரங்கள். இனி கண்டிப்பா தல தெறிக்க விட போறாரு!

 

Exit mobile version