Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தல அஜித்தா இப்படி கோப பட்டது! ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி!

Thala Ajitha was so angry! Great shock to the fans!

Thala Ajitha was so angry! Great shock to the fans!

தல அஜித்தா இப்படி கோப பட்டது! ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி!

சட்டமன்ற தேர்தல் ஆனது ஐந்து மாநிலங்களில் நடக்க இருக்கிறது.அந்தவகையில் மக்கள் அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.அதனையடுத்து நம் தமிழகத்தில் மூத்த இரு தலைவர்கள் இன்றி நடக்கும் சட்டமன்ற தேர்தல் இதுவே ஆகும்.அதனால் தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்ப்பு இருக்கிறது.இந்த முறை தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்காக அரசியல்வாதிகள் பல நூதன முறைகளை கையாண்டனர்.

பல கோடி பணம் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது.அந்தவகையில் இரு தினங்களுக்கு முன் புதுச்சேரியில் 2000 பணம் மற்றும் தங்க காசு அதனுடன் மோடி படம் ஆகியவை மக்களுக்கு விநியோகம் செய்து கையும் களவுமாக போலீசாரிடம் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.அதனால் இந்த தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அனைத்து மாநிலங்களிலும் பெரும் குளறுபடி நடந்த வண்ணம் இன்று வாக்கு பதிவு தொடங்கியது.

மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதற்காக முதன் முறையாக அனத்து வாக்கு பதிவு இடங்களிலும் சுகாதாரத்துரை  ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவும் வலியுறுத்தியுள்ளனர்.அந்தவகையில் பிரபலங்கள் அனைவரும் தங்களின் ஓட்டுக்களை விரைந்து சென்று காலை நேரங்களிலே செலுத்தி செல்கின்றனர்.முன்கூட்டியே வருவதன் மூலம் கூட்டங்களை தவிர்க்க முடியும் என்ற எண்ணத்தில் காலை நேரத்தில் வந்து தங்களின் வாக்குகளை செலுத்தி செல்கின்றனர்.

அவ்வாறு அஜித் தனது வாக்கினை செலுத்த வரும் போது ரசிகர்கள் அனைவரும் அவரை சுற்றி செல்பி எடுத்தனர்.அப்போது அஜித் மிகுந்த கோவம் முற்றார்.செல்பி எடுத்தவரின் செல்போனை பிடுங்கினார்.இவர் இவ்வாறு கோவம் அடைந்தது,பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.அவர் கொரோனா தொற்று பரவலின் காரணமாக அவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.ஏனென்றால் தற்போது தொற்றின் பரவல் அதிக அளவு பரவி வருகிறது.நாம் கூட்டமாக செல்பி எடுப்பதாலும்,ஒருவருடன் ஒருவர் நெருங்கி இருப்பதாலும் தொற்று உடனே பரவ நேரிடும்.அதனால் தல அஜித் அனைவரின் பாதுகாப்பு கருதி அவ்வாறு நடந்துக்கொண்டார்.அதுமட்டுமின்றி அவர் அவ்வாறு கோவம் அடைந்த வீடியோ அனைத்து ஊடகங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version