Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வந்துவிட்டார் தல தோனி!! LGM இசை மற்றும் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது ரசிகர்கள் ஆரவாரம்!!                             

வந்துவிட்டார் தல தோனி!! LGM இசை மற்றும் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது ரசிகர்கள் ஆரவாரம்!!                                            தல தோனியின் தயாரிப்பில் தோனி என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் எல்ஜிஎம் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் இளைஞர்களின் கனவு நாயகன் ஹரிஷ் கல்யாண் மற்றும் கணவு கன்னி லவ் டுடே படத்தின் ஹீரோயின் இவானா இருவரும் சேர்ந்து இப்படத்தில் நடிக்கிறார்கள்.                  இப்படத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் இன்று கிரிக்கெட் உலகின் கூல் கேப்டன் தல தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி அவர்களால் வெளியிடப்படுகிறது. தல தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020இல் ஓய்வு பெற்றார். ஆனாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடர்களில் பங்கேற்று வருகிறார். அவருக்கு ஓய்வு என்பதே கிடையாது. ஐபிஎல் இல் சென்னை அணிக்காக ஐந்து முறை சாம்பியன் பட்டம் வாங்கி கொடுத்துள்ளார்.                    இதனால் சென்னை ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுளாக கொண்டாடப்படுகிறார்.            தோனி அவர்களும் சென்னை அவரது இரண்டாம் தாய் வீடு என நெகிழ்ச்சியாக எல்லா பேட்டிகளிலும் கூறி வருகிறார். அதற்கு தகுந்தாற்போல் அவர் தயாரிக்கும் முதல் படம் தமிழில் எடுக்கப்படுகிறது. இதனால் தோனியின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்திற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு சென்னை வருகை தந்துள்ளார் தோனியும் அவரது மனைவி சாக்ஷி அவர்களும் அவர்களை மலர் தூவி ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் தயாரித்து படத்திற்கு இசையும் அவரே அமைத்துள்ளார்.  இதில் மேலும் நதியா,யோகி பாபு போன்ற உச்சகட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். தோனியை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆரவாரத்துடன் உள்ளனர்.

Exit mobile version