பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பிறந்த நாளான இன்று அவர் நடித்திருக்கும் தலைவி படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு படக்குழு வாழ்த்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் தலைவி. 20216ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த நிலையில் சினிமா, அரசியல், பொதுவாழ்வு என அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு அத்யாயத்தையும் படமாக்க திட்டமிடப்பட்டது. சட்டமன்றத்தில் கர்ஜிக்கும் ஜெயலலிதாவின் கேரக்டரில் நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தேர்வு செய்யப்பட்டார். இந்த பட்டத்தை ஜெயலலிதாவின் வாழ்க்கை ஓட்டத்துடன் எடுத்துக்கிறார் ஏ.எல்.விஜய்.
ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்க, ஜெயலலிதாவின் வாழ்வோடு இணைப்பிரியா இடம்பெற்ற எம்ஜிஆரின் கேரக்டரில் நடிகர் அரவிந்த்சாமி நடித்து அசத்தியுள்ளார். இவர்களுடன் மதுபாலா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள தலைவி ஏப்ரல் மாதம் 23ம் தேதி ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைவியில் ஜெயாவாக வலம் வரும் கங்கனா ரணாவத்திற்கு இன்று பிறந்த நாள். அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கங்கனாவின் பிறந்தநாள் பரிசாக தலைவி பட ட்ரெய்லரை வெளியிட்டு படக்குழு அசத்தியுள்ளது. தலைவி ட்ரெய்லரில் ஜெயலலிதாவாக வலம் வரும் கங்கனா ரனாவத் மிரட்டியிருக்கிறார். ட்ரெய்லரே இந்த அளவுக்கு இருக்கு என்றால் படம் எப்படி இருக்கும் என்று அனைவரும் கேட்கும் அளவுக்கு உள்ளது தலைவி. டிரெய்லரில், ”மகாபாரதத்திற்கு இன்னொரு பெயர் ஜெயா. என்னை அம்மாவா பார்த்தீங்கனா என் இதயத்தில் இடமிருக்கும். என்ன வெறும் பொம்பளயா பார்த்தீங்கனா” என்று கங்கனா வசனம் பேசி அசத்தி இருக்கிறார்.
https://twitter.com/ZeeStudios_/status/1374240263304966149