Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தளபதி 67 படத்தின் மாஸ் அப்டேட்! உற்சாகத்தின் உச்சத்தில் விஜய் ரசிகர்கள்!

Thalapathy 67 movie mass update! Vijay fans at the peak of excitement!

Thalapathy 67 movie mass update! Vijay fans at the peak of excitement!

தளபதி 67 படத்தின் மாஸ் அப்டேட்! உற்சாகத்தின் உச்சத்தில் விஜய் ரசிகர்கள்!

மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் தற்போது தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.மேலும் இந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்கவுள்ளார்.இந்த படத்திற்கு அனிருத் இசைமைக்கவுள்ளார்.இவர்கள் இருவரும் இணைந்த கூட்டணி மாஸ்டர் என்ற வெற்றி படத்தை கொடுத்துள்ளனர்.மேலும் அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்த்தில் சஞ்சய் தத்,நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் பூனம் பாஜ்வா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.கடந்த மாதம் பூனம் பாஜ்வா ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.அதில் இயக்குனர் லோகேஷ் மற்றும் நடிகர் விஜய் ஆகியோருக்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி தான் விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியானது.ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் தளபதி 67 படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ள நிலையில் தற்போது கைதி படத்தில் வந்த டில்லி கேரக்ட்டர் இந்த படத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.இந்த தகவலின் மூலம் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Exit mobile version