விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் 39 வயதான நடிகை ஒருவர் புதிதாக இணைந்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னணி நடிகராக ஏறத்தாழ 30 ஆண்டுகள் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். ஏராளமான ரசிகர் பட்டத்தை கொண்ட விஜய் தளபதி 69 படத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகப் பவதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தார்.இது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அவரின் அரசியல்பிரவேசத்தை அவர்கள் வரவேற்றனர்.தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் விஜய் தளபதி 69 படத்திற்கு பின்னர் நடிப்பிற்கு முழுமையாக முழுக்கு போட உள்ளார். இந்த படத்தில் அவருடன் பல்வேறு நடிகர் நடிகைகள் நடிக்க தேர்வாகியுள்ளனர். அதில் தற்போது புதிதாக நடிகை ஒருவரும் இணைந்துள்ளார்.
கெவிஎன் புரொடக்சன் முதன்முறையாக தயாரிக்கும் முதல் தமிழ் படம் தளபதி 69. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத நிலையில் ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள ராணுவ கேம்பிற்கு அருகில் இதன் படப்பிடிப்பு நடந்து வரும் சூழ்நிலையில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். தளபதி 69 படத்தில் எதிர்பார்த்த சில நடிகர்களும், எதிர்பார்க்காத சில நடிகர்களும் இணைந்துள்ளனர். அந்த வகையில் எதிர்பார்க்காத லிஸ்டில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் இணைந்துள்ளார்.
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி போடா போடி திரைப்படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இயல்பாகவே இவர் நடிக்கும் படத்தில் கேரக்டருக்கு வலிமை சேர்த்து விடுவார். அந்த வகையில் இவரின் தாரை தப்பட்டை, சண்டக்கோழி 2,போன்ற படங்கள் இவரது நடிப்பிற்கு வரவேற்பினை பெற்று தந்தன.
சமீபத்தில் ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா- வின் இரண்டாவது மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுவும் இவருக்கு வரவேற்பினை பெற்று தந்தது. கேரக்டரை உள்வாங்கி நடிக்கும் வரலட்சுமி வில்லி கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமான நடிகையாக திகழ்ந்து வந்தார்.
வரலட்சுமி ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து சர்க்கார் படத்தில் வில்லியாக நடித்திருந்தார். தற்போது தளபதி 69 படத்திலும் அது போன்றதொரு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என தகவல் வெளிவந்துள்ளது.